20 காவிரியின் வடகரை வழியாக ஒரு காததுாரம் கடந்து சென்று பொழிலொன்றை அடைந்தனர். ஆங்குக் கவுக்தியென்னும் தவமுதியாள் ஒருத்தி தவச்சாலை அமைத்துத் தங்கியிருந்தாள். சமண் சமயத்தைச் சார்ந்த பெண்துறவியாகிய கவுந்தியைக் கோவலனும் கண்ணகியும் கண்டனர். அவள்பால் தாம் மதுரை மாநகருக்குச் செல்லும் செய்தியை அறிவித்தனர். அவளும் உடன் வருவதாகப் புறப்பட்டனள். மூவரும் மதுரை நோக்கி கடந்தனர். கண்ணகி கதிரவன் வெயில்காலும் பகற்பொழுதில் நடந்துசெல்ல வருக்தி ள்ை. ஆதலின் நிலாத்தோன்றிய இராப்பொழு தெல்லாம் கடந்து, சோழநாட்டு வளங்களே எல்லாம் கண்டு களித்தவண்ணம் உறையூர்ப் புறஞ்சோலை ஒன்றை வந்துற்றனர். உறையூர்ச் சோலேயில் உறைதல் - கோவலன் முதலான மூவரும் உறையூர்ச் சோலே யில் தங்கியிருந்த வேளையில், அங்கு வம்பப் பரத்தை யுடன் துார்த்தன் ஒருவன் வந்துற்ருன். கண்ணகியை யும் கோவலனேயும் கண்ணுற்ற அவர்கள், கவுந்தியை நெருங்கி, மதனும் இரதியும் போன்ற இவர்கள் யாவர்?' என்று வினவினர். இவர்கள் என் மக்கள்; அவர்களே நெருங்காமல் அகன்று போங்கள்,' என்று கடிந்து மொழிந்தாள் கவுந்தி. அதுகேட்ட அத்தீவினை யாளர், 'ஈதென்ன வியப்பு! ஒரு தாயின் மக்கள் காதலராக வாழ யாங்கள் கண்டதில்லையே!” என்று சொல்லிநகையாடினர். அவர்களுடைய இழிந்த மொழி களைக் கேட்ட கவுந்தி கடுங்கோபம் கொண்டாள். விேர் இம் முதுகாட்டில் திரிந்துழலும் குறுநரிகள் ஆகக்கடவீர்,” என்று சபித்தாள்.
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/29
Appearance