25 என்று பணிந்து முறையிட்டான். வினை விளேயும் காலமாதலின் வேந்தன் யாதும் ஆராயாது காவலாள ரைக் கூவி அழைத்தான். ' தேவியின் சிலம்பு இவன் குறித்த கள்வன் கையகத்தே இருக்குமாயின் அவனேக் கொன்று, சிலம்பைக் கொண்டு வருவீர்,” என்று கட்டளையிட்டான். பொற்கொல்லன் தன் எண்ணம் பலித்ததென்று உள்ளம் களித்தான். காவலாளருடன் சென்று கோவலனைக் காட்டினன். இவர்கள் அரசன் ஆணையால் சிலம்புகாண வந்தார்கள்,' என்று கோவலனுக்குக் கூறினன். கோவலன் கொலேயுண்ணல் அரசன் ஆணையைச் சிரமேல் தாங்கி வந்த காவ லாளர் கோவலனைக் கூர்ந்துநோக்கி, இவன் கள்வனல் லன், கொலே செய்தற்கு உரியனுமல்லன்,' என்று உரைத்தனர். அங்ங்ணம் கூறிய காவலாளரை மறுத்து இகழ்ந்து இவன் கள்வனே எனப் பல காரணங்களைப் பொருத்தமாக எடுத்தியம்பின்ை. அவனுடைய சொற் களைக் கேட்ட காவலருள் கொலேயஞ்சாப் பாதகன் ஒருவன் விரைந்து சென்று கோவலனே வாளால் எறிந்து வீழ்த்தினன். ஊழ்வினை உருத்து வந்தமை யால் புகழ்படைத்த பாண்டியன் செங்கோல் வளைக் தது. கோவலன், பொற்கொல்லன் சூழ்ச்சியால் கொலே யுண்டு வீழ்ந்தான். கண்ணகி செய்தி அறிதல் இவ்வேளையில் கண்ணகி இருந்த இடைச்சேரியில் திச் சகுனங்கள் பல தென்பட்டன. அவற்றைக் கண்ட மாதரி முதலானேர் தீது நிகழாவண்ணம் திருமாலே வேண்டிக் குரவைக்கூத்து நிகழ்த்தினர். கூத்தின் முடி
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/34
Appearance