43 சமண் சமயக் கருத்துக்களேக் காவியத்தில் புகுத்து வதற்கென்றே கவுந்தியடிகள் என்னும் பாத்திரத்தைப் படைத்துக்கொண்ட இளங்கோவடிகள் சமண சமயத் தவரே என்பர் சிலர். அவர் இளமையில் துறவு பூண்டு வஞ்சிமா நகரின் கீழ்த்திசை அமைந்த குணவாயில் கோட்டத்தில் தங்கினர். கோட்டம் என்பது அருகன் கோயிலைக் குறிக்கும். குணவாயில் என்னும் சிற்றுாரில் விளங்கிய அருகன் கோயிலில் அமர்ந்திருந்தார் என்று அவரே பதிகத்தில் குறித்தலால் அவர் சமணரே என் பர். மேலும் அடிகள் என்ற சொல் சமணத் துறவி களைக் குறிக்கு மாதலின் இளங்கோவடிகள் சமணரே என்பதில் யாதும் ஐயமில்லை என்பார் ஒரு சாரார். இளங்கோ சைவர் இளங்கோவடிகளின் தமையனுகிய சேரன்செங் குட்டுவன் சிவனடி மறவாத சிந்தையினன். இவர்க ளுடைய பெற்ருேரும் சிவனை வழிபடும் செம்மையுடை யோர். இமயத்தினின்றும் செங்குட்டுவனேக் காணவந்த முனிவர் சிலர், செஞ்சடை வானவன் அருளினில் விளங்க, வஞ்சித் தோன்றிய வானவ!' என்று விளித்து வடபுலத்து நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றை அவனுக்கு அறிவித்தனர். மாடலன் என்னும் மறையவன், செங் குட்டுவனே, ஆணேறு ஊர்ந்தோன் அருளினில் தோன்றி, மாநிலம் விளக்கிய மன்னவன்,” என்று குறிப்பிடுகின்றன். செஞ்சடை வானவன்' என்றும், ஆணேறு ஊர்ந்தோன் என்றும் குறிக்கப்பெறும் கடவுள் சிவபிரானே அன்ருே இங்ங்னம் சிவபிரான் திருவருளால் பிறந்தவன் செங்குட்டுவன் என்று இளங்கோவே தமது நூலில் குறிப்பிடுகின்ருர்,
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/51
Appearance