உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. சத்தனர் ス க. பெயர்க்காரணம் தமிழின் முதற்பெருங்காவியமாகிய சிலப்பதிகா ரத்துடன் தொடர்புடைய மற்ருெரு பெருங்காவியம் மணிமேகலையாகும். அதனை இயற்றிய கவிஞர் சாத்தனுர் ஆவர். இவரைச் சீத்தலைச் சாத்தனர் என்றும், மது ரைக் கூலவாணிகன் சாத்தனர் என்றும், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனர் என்றும் மூன்று விதமாகக் குறிப்பர். சாத்தன் என்ற பெயர், ஐயனர் பெயர் என்பர் ஒரு சாரார். புத்தர் பெருமானுக்குரிய பெயர்களுள் ஒன்று சகஸ்தன் என்பது. அதன் திரிபே சாத்தன் என்று வழங்கலாயிற்று என்பர் மற்ருெரு சாரார். சாத்து என்ற சொல், வாணிகத்தைக் குறிக்கும். வாணிகத்தால் வளம் பெற்ற ஓர் ஊரைச் சாத்துரர் என்று வழங்கக் காண்கிருேம். சிலப்பதிகாரக் காவியத் தலைவனுகிய கோவலன் தந்தை, காவிரிப்பூம்பட்டினத்துப் பெரு வணிகன் ஆவான். அவன் மாசாத்துவான் என்று வழங்கப் பெற்ருன். ஆதலின், மதுரை மாநகரில் பெரு வணிகராக விளங்கிய மணிமேகலை ஆசிரியர் சாத்தனுர் என்று பெயர்பெற்றிருக்கலாம். இவர் சோழநாட்டில் உள்ள சீத்தலை என்ற ஊரில் தோன்றியவர். சித்தலே என்னும் ஊர், திருச்சிராப் பள்ளி மாவட்டத்தில் பெருமளுர்த் தாலுக்காவில் உள்ளது. பெருஞ்சாத்தன், பேரிசாத்தன் முதலிய புல வர்களின் வேறுபடுத்த இவர் பெயரை ஊர்ப்பெய