84 வழி கூட்டினுள். பின்னர், வான்வழியாக வஞ்சிமா நகரை அடைந்து, தன் தாயாகிய கண்ணகித் தெய் வத்தின் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு நின்ருள். - அறவுரை கேட்டு அறிதல் பத்தினித் தெய்வம் தன்னே வழிபட்ட மணி மேகலைக்கு எதிர்காலத்தில் தனக்கு நிகழவிருக்கும் நிகழ்ச்சிகளைக் கூறினள். பல்வகைச் சமயவாதிகளைக் கண்டு, அவர்தம் அறங்களேக் கேட்டு உணருமாறும் அதற்கு வேற்றுருக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினுள். தாயின் நல்லுரை கேட்ட மணிமேகலை, தனக்கு மணி மேகலா தெய்வம் தந்த மந்திரத்தால் ஒரு மாதவன் வடிவைத் தாங்கிள்ை. சமயக்கணக்கர் பலர் வாழும் இடங்கட்குச் சென்ருள். பிரமாணவாதி முதல் பூத வாதி ஈருக உள்ள பலரையும் கண்டு அவர்தம் அறங் களையெல்லாம் கேட்டறிந்தாள். அங்குள்ள பெளத்தப் பள்ளியை அடைந்து, ஆங்குத் துறவு பூண்டு வாழும் கோவலன் தந்தையைக் கண்டு, தனக்கு நேர்ந்தவற்றை எல்லாம் கூறினள். அவனும் தன் வரலாற்றைக் கூறி, அங்கு வந்த அறவணர் முதலான மூவரும் காஞ்சிமா நகருக்குச் சென்ற செய்தியை அறிவித்தான். மழை வளம் இல்லாமையால் காஞ்சியில் மக்கள் கடும்பசியால் வாடுகின்றனர்; அங்குச் செல்க,' என்று வேண்டின்ை. அறவணர் அறவுரை பெறுதல் மாசாத்துவான் சொல்லிய செய்தியைக் கேட்ட மணிமேகலை தன் உண்மை வடிவத்துடன் காஞ்சிமா நகரை அடைந்தாள். அங்குப் பசிப்பிணியால் வருந்தும் மக்கட்கு அமுதசுரபியைக் கொண்டு இன்னமுதுாட்டி
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/92
Appearance