பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 யாகிய மணிமேகலை புத்த மதத்தைச் சார்ந்த பெண் துறவியாகத் துயவாழ்வு நடத்தினுள். ஆதலின் அம் மதச் சார்புடைய அ றங்கள் பல ஆங்காங்கு விரித்து உரைக்கப்படுகின்றன. மணிமேகலையின் தாயாகிய மாதவி, தன் காதல கிைய கோவலன் மதுரை மாநகரில் அடைந்த கொடுங் துயர் கேட்டு மனைவாழ்வைத் துறந்தாள். அறவன வடிகளின் அடிமிசை விழுந்து பணிக்து, காதலன் உற்ற கடுந்துயரைக் கூறி வருந்தினுள். அவர் அவட்குப் புத்த மதத்தின் பொன் போன்ற அறங்களாகிய நால்வகை வாய்மைகளையும் ஐவகைச் சீலத்தையும் அறிவுறுத் தினர். - 'பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பேரும்பே ரின் பம் பற்றின் வருவது முன்னது பின்னது அற்றுே உறுவது அறிக.” என்பது அறவணர் அருளிய அறவுரையாகும். பிறப் பால் வருவது பெருந்துன்பமே என்றும், பிறவாமையே பேரின்பம் என்றும், ஆசை காரணமாகவே பிறவி ஏற்படுகிறது என்றும், பிறவாமையை அடைதற்கு உலகப் பற்றையெல்லாம் ஒருங்கே துறக்கும் துறவே உயர்ந்த வழியென்றும் துறவின் உயர்வை அம் மாதவிக் குத் தெளிவுறுத்தினர். உதயகுமரன், மணிமேகலையின்மீது கொண்ட காதல் மயக்கத்தால் உவவனம் அடைந்து, ஆங்குத் தனித்து நின்ற சுதமதியிடம் அவள் தன்மையாதெனக் கேட்டான். அச் சுதமதி அவன் அறிவு திருந்துமாறு மக்கள் உடலின் மிக்க இழிசிலேயைத் தக்கவாறு எடுத் துரைததாள.