உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 உலகவறவியில் உதயகுமரன், காஞ்சனஞல் வெட் டுண்டு இறந்த செய்தியைச் சக்கரவாளக்கோட்டத்துத் தவமுனிவர்கள் அரசனுக்கு அறிவித்தனர். காமத்தால் அறிவிழந்த காளேயர் பலர் கற்புடைய மகளிரை நெருங் கியும், தவமகளிரை விரும்பியும் தண்டிக்கப்பட்ட பண்டை வரலாறுகளே அவனுக்கு எடுத்துரைத்தனர். அப்போது அவர்கள் அறமே உயிர்க்கு அருந்துணையா வது என்னும் உண்மையை அரசனுக்கு வலியுறுத்து கின்றனர்: 'இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழத்துணை யாவது.” என்பது அவர்கள் அரசனுக்கு உரைத்த அறவுரையா கும். யாம் இதுபொழுது இளம்பருவத்தினை உடை யோம்; ஆதலின் பின்னர் அறம் செய்து கொள்ளலாம் என்று எண்ணுமல் கையில் பொருள் உள்ள காலத்தி லேயே கரவாது அறத்தைச் செய்க, அதுவே பொன் றுங்கால் பொன்ருத் துணையாக நின்று உதவும் என்று கூறிய வள்ளுவர் வாய்மொழியை நன்கு வலியுறுத்தி யது அத் தவமுனிவர்களின் அறவுரை. இனி, மகனை இழந்த பெருந்துயரால் வருந்தியிருக்த இராசமாதேவிக்கு மணிமேகலை கூறிய அறவுரை அவ ளது தெளிந்த அறிவை விளக்குவதாகும். 'அரசியே! நீ உன் மகனது உடலின் பொருட்டு அழுதாயோ ? உயிரின் பொருட்டு அழுதாயோ ? அவனது உடம்பு ஒழிந்ததற்கே வருக்தி அழுதேனென்ருல் அவ் உடலேச் சுடலேயில் கொண்டு எரித்தற்குக் கொடுத்தது நீ யன்ருே? அன்றி, உயிர் ங்ேகியதற்கு அழுதேனென்ருல்