90 அவ்வுயிர் கிலேபேறுடையதாகலின் அது செய்த வினை வழியே ஒர் உடல் எடுத்திருக்கும். அவ் உடல் இன்ன தெனத் தெரிதல் அரிதாகும். அவ் உயிர்க்கு அன்பு செய்ய விரும்பினுல் எவ்வுயிர்க்கும் இரங்கல்வேண்டும். அங்ங்னம் இரங்கில்ை பலவாகிய உயிர்க் கூட்டத்துள் கின் மகன் உயிரும் ஒன்ருமாதலின் அதற்கு அன்பு செய்தனேயாவாய்,” என்று மணிமேகலை, இராசமா தேவிக்கு அறந்தரும் மணிமொழி பகர்ந்தாள். அவள் அருளறத்தை மேற்கொண்டு ஒழுகுமாறு அறவுரை வழங்கினுள். . இங்ங்னம் மணிமேகலை, தன்னைப் பலவாறு துன் புறுத்திய அரசமாதேவியை மன்னித்ததேயன்றி அற வுரை கூறி, அவள் துயரம் ஆறுமாறு செய்தாள். துன்பம் செய்தவர்க்கும் இன்பம் செய்தலே இணையற்ற சால்பு என்று பொருளுரை யருளிய பொய்யில் புலவ ரின் பொன்மொழிக்குப் பொருந்திய சான்ருய் மணி மேகலை திகழ்ந்தாள் அன்ருே ! . மேலும், இந் நூலாசிரியர் பல இடங்களில் கற் புடை மகளிரின் மாண்பினைப் பொற்புற எடுத்துப் போற்றுகின்ருர். காம இன்பத்தின் இழிவினைக் கடிங் துரைக்கின்ருர், மக்கள் யாக்கையின் நிலையாமையைப் பலவிடத்தும் வலியுறுத்துகின்ருர் வினையுணர்வை நூல் முழுதும் விளக்கிச் செல்கின்ருர், தூய துறவற வாழ்வே பேரின்பத்தை நல்குவது என்று சொல்லு, கின்ருர். இங்ங்னம் பற்பல அறவுரைகளாகிய மணி களே இடையிடையே பதித்துத் தமது காவியமாகிய அணியினே ஒளி வீசுமாறு செய்த சீத்தலைச் சாத்த ஞரின் செந்தமிழ்ப் புலமைத்திறம் கற்பார்க்குக் கழி பேருவகை தருவதாகும்.
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/98
Appearance