உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சேக்கிழார் 母。 ஆசிரியர் வரலா தொண்டைநாட்டு வேளாளர் 'சான்ருேர் உடைத்து' என்று ஆன்ருேரால் போற் றப் பெற்ற தொண்டைநாடு பண்டை நாளில் இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற். றுள் புலியூர்க் கோட்டம் என்பதொன்று. அது கோவூர், பூவிருந்தவல்லி, குன்றத்தூர் முதலிய ஊர்களைக் கொண்ட நிலப்பகுதியாகும். அது புலியூரைத் தலைநகரமாகக் கொண்ட கோட்டமாதலின் புலியூர்க் கோட்டம் என்று பெயர்பெற்றது. - பெரியபுராணப் பெருங்காவியத்தை அருளியசேக் கிழார் தொண்டை நாட்டுப் புலியூர்க் கோட்டத்தி லுள்ள குன்றத்தூரில் தோன்றினர். காடு கெடுத்து நாடாக்கிய சோழன் கரிகாலன் தொண்டைநாட்டை வளப்படு த்த நாற்பத்தெண்ணுயிரம் குடிகளே அங்காட் டில் குடியேற்றினன். அங்ங்னம் குடியேறினர் அனே வரும் தொண்டைமண்டல வேளாளர் என்று வழங் கப்பெற்றனர். அவர்கள் கிழார் என்ற சிறப்புப்பெய ரால் குறிக்கப்பட்டனர். அவருள் கூடல் கிழான், புரிசை கிழான், வெண்குளப்பாக் கிழான், சேக்கிழான் என்பவர் குடிகள் சிறப்புற்று விளங்கின. சேக்கிழார் பெயர்க்காரணம் கிழான் என்பது கிழமை என்ற பண்படியாகப் பிறந்த சொல். அதற்கு உரிமையுடைய தலைவன்' என்பது பொருள். கூடல்கிழான் என்பது கூடல் என்