உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

71

நியாயத்தை இன்னும் அதிகமாக எடுத்துச் சொல்லவில்லை என்று தான் நான் கருதுகிறேன். அந்தக் காரணத்தாலேதான் மைசூர் மக்களுக்கு இந்த விஷயம் இன்றைக்குச் சரியாகப் புரியவைக்கப் படாமல் இருந்துகொண்டிருக்கின்றது. 1892-ஆம் ஆண்டு ஒப்பந்தம் என்ன, 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தம் என்ன, 1964-ஆம் ஆண்டிலே ஹேமாவதிக்காக நாம் தீட்டிய அறிக்கையில் நாம் ஒப்புக்கொண்டிருக்கின்ற ஒப்பந்த ஷரத்துக்கள் என்ன, 1967-ஆம் ஆண்டு இரண்டு மாநிலங்களின் பொறியாளர்களும், மத்திய அரசின் பொறியாளர் தலைமையிலே கையெழுத்துப்போட்டார்கள், இவைகளையெல்லாம் மைசூர் மக்களுக்கு அங்கே இருக்கின்ற எல்லா கட்சிகளும் எடுத்துரைக்க வேண்டும். எங்களுடைய திராவிட முன்னேற்றக் கழகத்தையும் சேர்த்துச் சொல்கிறேன், இந்த விஷயத்தில் மைசூர் மாநிலத்திற்கு எதிராகத் தமிழ்நாடு செயல்படுகிறது. ஆகவே நமது மாநிலத்து உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று மைசூரில் இருக்கிற பழைய காங்கிரஸ் கட்சியானாலும், புதுக் காங்கிரஸ் கட்சியானாலும், சுதந்திர கட்சியானாலும், கம்யூனிஸ்ட் கட்சியானாலும், கழகமானாலும், அத்தனை பேரும் மைசூர் பக்கந்தான் இருப்போம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நான் அங்கேயும் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் நான் கூறுவதற்கு மன்னிக்க வேண்டும், “தாங்கள் அதைப் படிக்கவில்லையா, நீதான் எங்களுக்குச் சொல்ல வேண்டுமா?” என்று என்னைக் கேட்கச்சொல்ல வேண்டாம் என்று எண்ணியிருக்கக் கூடும். இந்த ஒப்பந்தங்களையெல்லாம் மீண்டும் எடுத்துப் படித்துப் பார்க்கட்டும் மைசூரிலே இருக்கிற அனைத்துக் கட்சித் தலைவர்கள். நாங்கள் ஒரு இம்மியளவாவது ஒரு எள் முனை அளவாவது அந்த ஒப்பந்தத்திற்கு மாறாக எங்களுடைய கோரிக்கைகளை முன் வைக்கிறோமா என்பதை அந்தத் தலைவர்கள் எடுத்துச் சொல்லட்டும். எதில் நாங்கள் முரண்படுகிறோம்? ஹேமாவதி கபினி, ஹாரங்கி, ஸ்வர்ணவதி ஆகிய இந்த நீர்ப் பாசனத் திட்டங்களை நிறைவேற்றக்கூடாது என்றா சொல்கிறோம், பாசனத் திட்டங்களை நிறைவேற்றுங்கள்' அப்படி நிறைவேற்றுகிற நேரத்தில் எங்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். எங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடாது.