72
காவிரிப் பிரச்சினை மீது
தஞ்சை மாவட்டம் காவிரி டெல்டாப் பிரதேசம் அந்த அணைக்கட்டுகளின் மூலமாக பாதிக்கப்படாமல் இருப்பதற்கான விதிமுறைகளைப் பின்பற்றுங்கள் என்றுதான் கேட்கிறோம் அதற்காகத்தான் நடுவர் தீர்ப்பு தேவை என்கிறோம். நடுவர் தீர்ப்புக்கு விட்டால், நமக்கு எந்தவிதமான தடையும் கிடையாது. இங்கே பேசிய திரு. ராமசாமி படையாச்சி அவர்கள் ஒன்று சொன்னார்கள். நடுவர் தீர்ப்புக்கு நாம் விடச்சொன்னதற்குக் காரணம் அவர்கள் மறுக்கிறார்கள் என்றால், அவர்கள் பக்கத்தில் நியாயம் இல்லை என்பது புலனாகிறது. மைசூர் மக்கள் இதில் எடுத்துச் சொல்லட்டும், ஏற்கனவே செய்துள்ள ஒப்பந்தத்தை எப்படி மீறலாம் என்று மைசூர் மக்களைக் கேட்டால், அங்குள்ள அத்தனைபேரும் கல்மனம் படைத்தவர்களா; தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் வேதனைபட வேண்டும்; வயல்கள் எல்லாம் காய்ந்துபோக வேண்டும்; அவர்கள் வயிறு வாட வேண்டும்; அவர்களுடைய கண்ணீர்க் குளங்களைக் காண வேண்டுமென்று எண்ணுகிறார்களா மைசூர் மாநிலத்திலுள்ள கர்நாடக மக்கள்? இல்லை இல்லை, மைசூரில் உள்ள அரசியல் தலைவர்கள் நிச்சயமாக தங்கள் ஒத்துழைப்பைத் தந்தாக வேண்டும். அங்குள்ள கட்சிக்காரர்கள் மக்களிடம் உண்மை நிலையை எடுத்துச்சொல்ல வேண்டும். அங்குள்ள நிலைமை என்னவென்றால், ஒவ்வொரு அரசியல் கட்சியும் இதில் போட்டிபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். யார் நடுவர் தீர்ப்புக்கு விடவேண்டாமென்று சொல்வதில் முந்திக் கொள்வது என்பதில் போட்டிபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் போட்டியை மைசூர் மாநிலத்திலுள்ள எல்லாக் கட்சிக் காரர்களும் தவிர்த்துக்கொண்டு ஒப்பந்தந்திலுள்ள உண்மையான ஷரத்துக்களைப்பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்வார்களானால், முக்கியமாக ஆளும் கட்சியாக உள்ள இந்திரா காங்கிரஸ் கட்சிக் காரர்கள் அந்தக் காரியத்தை முன்னின்று நடத்துவார்களானால், மற்ற கட்சிக்காரர்கள் அவர்கள் பின்னால் வந்து மைசூர் மாநிலத்தில் ஒரு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த முடியும் என்று கருதுகிறேன். திட்ட அமைச்சர் திரு. சி. சுப்ரமணியம் அவர்கள் இங்கே பேசுகிற நேரத்தில் குறிப்பிட்டதை எதிர்க் கட்சித் தலைவர் அவர்களும் மற்றவர்களும் எடுத்துக் சொன்னார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகள் வந்தானதும் மறுபடியும் இது