உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

73

பற்றிப் பேச முடியும் என்று அவர் கூறியிருக்கிறார். அது சரியான வாதம் அல்ல என்று நேற்றைக்கும் எடுத்துச் சொன்னேன். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருந்த காலத்தில்தான் இங்கேயும் அங்கேயும் நடுவர் தீர்ப்புக்கு விடவேண்டுமென்ற நம்முடைய கோரிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அதில் கூட பெரும்பான்மை பார்க்கவேண்டுமென்றால், தமிழக அரசும் கேரள அரசும் இரண்டுமே நடுவர் தீர்ப்பு கேட்கின்றன. வேண்டாமென்று சொல்வது ஒரு மாநிலம்தான். வேண்டுமென்று சொல்வது இரண்டு மாநிலங்கள், ஜனநாயகப் பண்போடு பெரும்பான்மையை எண்ணிப் பார்க்காமல் பதினெட்டு மாத காலமாகக் கடத்தி வந்திருக்கிறார்கள். பொதுமக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்த பிறகுதான், இதுபற்றிப்பேச வேண்டுமென்று தர்ம நியாயம் பேசப்படுமானால், அதை வாதத்திற்காக ஒத்துக் கொள்வோம். அந்த நேரத்தில்தான் எதிர்க் கட்சித் தலைவர் சொல்லியதைப்போல, அது வரையிலாவது இந்த அணைக்கட்டு வேலைகள் எல்லாம் நடைபெறாது என்ற உத்தரவாதத்தை தமிழ் நாட்டிற்கு அளித்தீர்களா? வேலை நடைபெறக்கூடாது என்று மைசூர் அரசிற்கு உத்தரவு போட்டீர்களா? நீங்கள் உத்தரவு போட்டால், அதை ஏற்று நடத்தக்கூடியவர்கள் இன்றைக்கு மைசூரில் இருக்கிறார். உங்களால் அனுப்பப்பட்ட கவர்னர் மைசூரில் இருக்கிறார். அந்த கவர்னரை எதிர்த்து அந்த உத்தரவை மதிக்கமாட்டோம் என்று கூறுவதற்கான அமைச்சரவை அங்கே இப்போது கிடையாது. நீங்கள் இந்த உத்தரவை தாராளமாகப் போடலாம். மக்கள் பிரதிநிதிகள் முடிவு எடுக்கிற வரையில் இந்தப் பிரச்சினையை ஒத்திவைத்து அணைக்கட்டு வேலைகள் ஒத்திவைக்கப்படுவதுதானே நியாயம்? இந்த நியாயம் மத்திய அரசிற்குத் தெரிந்தும் வேண்டுமென்றே தட்டிக் கழிக்கிறார்கள் என்றால், தமிழர்கள் ஏமாளிகள் என்று கருதுகிறார்களா? எனக்கு அதுவும் புரியவில்லை, ஆகவே இவைகளுக்கு விடை காணத்தான் இந்த இரண்டு மன்றங்களிலும் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இந்தத் தீர்மானத்தை உருவாக்கியிருக் கிறோம். இடையில் இந்தத் தீர்மானம் மாறாத அளவுக்கு நல்ல நிலைமை உருவாகும். நாம் இங்கே வலியுறுத்துகிற தீர்மானத்தைப் போடுவதைவிட மத்திய அரசைப் பாராட்டுகிற தீர்மானமாகப் போடுகிற அளவுக்கு நிலைமை ஏற்படும் என்று தான்