உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

காவிரிப் பிரச்சினை மீது

எண்ணியதாக எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு. மாதவனும், திரு. சாதிக் பாஷாவும் டெல்லிக்குச் சொன்றார்கள் திரு. கே. எல். ராவின் அழைப்பின்படி. திரு. கே. எல். ராவ் அவர்கள் சில யோசனைகளைச் சொன்னார்கள். அந்த யோசனைகள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்துச் சொல்லப்பட்டன. அனைத்துக் கட்சித் தலைவர்கள்கூட அந்த யோசனைகளை ஏற்றுக்கொண்டு, ஏற்றுக்கொண்டு என்றால் நாங்கள் சொன்னவற்றை ஏற்றுக்கொண்டு அவைகளுக்கான உறுதியைக் கொடுக்கிறீர்களா என்று கேட்டார்கள். பலமுறை தொலைபேசி மூலமாக திரு. மாதவன் அவர்களோடும் திரு. சாதிக் பாஷாவோடும் பேசுகிற நேரத்தில் கேட்டேன். ஆனால் இது வரையில் அந்த யோசனை உறுதிப்படுத்தப்படவில்லை. அந்த யோசனை உறுதிப்படுத்தப்படாததால், நாம் இரண்டு மன்றங் களையும் கூட்டிப் பேசிவிட்டு, மேலும் காலதாமதம் செய்து தேர்தல் வரையில் காலம் கடத்தலாம் என்று அவர்கள் கருதினால், அதைவிட தமிழகத்திற்குச் செய்யக் கூடிய தீமை இருக்க முடியாது என்ற முடிவுக்கு நாம் வந்தாக வேண்டிய கட்டத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

திரு. கே. எஸ். அப்துல் வகாப் : மாண்புமிகு அமைச்சர்கள் இரண்டு பேரும் சென்றிருந்ததாகக் கூறினார்கள். அவர்கள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களைச் சந்தித்துப் பேச முயற்சித்தார்களா?

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மத்திய நீர்ப் பாசனத்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசினார்கள். அந்த அம்மையாரைச் சந்தித்துப் பேசவில்லை. மத்திய நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் விடுத்துள்ள யோசனையை மறுபடியும் மைசூரில் உள்ளவர்களோடு கலந்து பேசி உறுதிப்படுத்த வேண்டுமென்று இருந்ததால், இடையில் இந்திரா அம்மையாரைச் சந்திக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படவில்லை. இந்த நிலைமையில் மைசூர் அரசோடு தமிழ்நாட்டு அரசுக்கு ஏற்பட்டுவிட்ட பெரும் பிரச்சினையில் மத்திய அரசு மேலும் மேலும் காலம் தாழ்த்திக்கொண்டு போவதில் நமக்கு ஏற்படக்கூடிய தீமைகள் என்னென்ன என்று விளக்கமாகவும் மிகுந்த