கலைஞரின் சட்டமன்ற உரைகள்
75
உருக்கத்தோடும் இங்கே எடுத்துச் சொல்லப்பட்டது. காவிரி பாலாறு போல ஆகிவிடும் என்று வேடிக்கையாகச் சொல்லவில்லை. ஒரு காலத்தில் பாலாறு எவ்வளவு வெள்ளப் பெருக்கோடு ஓடியது என்பதும் இடையில் ஏற்பட்ட விளைவின் காரணமாக அது பாழாறாக ஆகிவிட்டதும் தெரியும். இன்றைக்கு இந்தத் தவறுக்கு நாம் இடம் கொடுத்தோமானால், எதிர்காலத்தில் தமிழ்ச் சமுதாயத்தின் சாபத்திற்கு நாம் ஆளாகவேண்டியவர்களாக இருப்போம். அதற்காகத்தான் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இந்தக் கிளர்ச்சியில் அணி வகுத்து நின்று கொண்டிருக்கிறோம். கிளர்ச்சி முனை எப்படியெல்லாம் இருக்கவேண்டுமென்று பேசினார்கள். மாண்புமிகு உறுப்பினர் திரு. அப்துல் வகாப் அவர்கள் டெல்லிக்கே சென்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கவேண்டுமென்று சொன்னார்கள். அதில் என்ன பஞ்சம்? ஒரு நாள் அல்ல. காலம் சொல்லாமல் கூட உண்ணாவிரதம் இருக்கலாம். கடை அடைப்பு செய்ய வேண்டுமென்று சொன்னார்கள். தமிழ்நாட்டு மக்கள் அதற்குத் தயாராக இருக்கிறார்கள். யாரும் அதில் சந்தேகப்படவேண்டிய அவசியமில்லை. இவை அனைத்தையும் நானே இந்த அவையில் அறிவித்து விடுவது நல்லதல்ல. எப்படியெப்படி நம்முடைய கிளர்ச்சி முறைகள் வகுக்கப்படலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் எடுத்துச் சொல்லியதைப் போல, உறுப்பினர்கள் எடுத்துச் சொன்னதைப் போல, வழக்கு மன்றத்திற்குச் சென்று நடுவர் தீர்ப்புக்கு விடாமல் காலம் தாழ்த்துகிற மத்திய அரசு நடுவர் தீர்ப்புக்கு விடுகிற முறையில் தலைமை நீதி மன்றத்திற்குப் போகவேண்டும். அதற்கு வழக்கு மன்றம் சென்றாக வேண்டுமா என்பதைக் கலந்தாலோசித்து முடிவு செய்யவேண்டும். நாம் இங்கே நிறைவேற்றிய தீர்மானம். பேசப்பட்ட உரைகளின் சுருக்கம் ஆகியவற்றை டெல்லிக்கு அனுப்பி பதினைந்து நாட்கள் காத்திருந்து சாதகமான பதில் வராவிட்டால் மீண்டும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைபற்றி யோசிக்க இருக்கிறோம் என்பதை மாத்திரம் கூறி, இந்தத் தீர்மானத்தை இங்கே வழி மொழிந்து பேசிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், இரண்டாண்டு காலத்திற்கும் மேலாக அரசோடு ஒத்துழைத்து அரசு எடுக்கிற காரியங்களுக்கு நல்லாதரவைத் தந்து யோசனை கூறிய