பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 காவிரி

கொள்ளும் முறைக் கண் வேறுபாடுகள் பல தோன்று கின்றன; சிலர் இல்லறத்தை இனிதாற்றிய பின்னர்,உலகப் பொருள்களிடத்தே வெறுப்புற்று, இயல்பாகவே, துற விடத்தே தம் உள்ளம் செல்ல, அதை மேற்கொள்ளுகின் றனர்; வேறு சிலர், உலகப் பொருள்களின் இயல்பினைத் தாம் ஒராதே, உலகமும், உலகப் பொருள்களும் நிலை யற்றன எனத் தம் முன்னுள்ளோர் கூறியதையே உட் கொண்டு அவ்வுலகப் பொருள்களின் நீங்கி, துறவினை மேற் கொள்ளுகின்றனர். இவ்விரண்டனுள், உலகமும், உலகப் பொருள்களும் ஆய இவற்றின் உண்மை இயல்பு களை, அவற்றோடு கூடி வாழ்ந்த முறையால், தம் அறிவின் துணையால், தாமே உள்ளவாறு உணர்ந்து, அதன் காரணமாக, இயல்பாகவே அவற்றிடத்தே பற்று ஒழிய மேற்கொண்ட துறவே வள்ளுவர் போற்றிய துற வாம். இத்துறவு நெறியே, சாலச் சிறந்த நெறியாதலை யும், இயற்கையோடியைந்த இன்ப நெறியாதலையும் விளக்கி மேலே செல்வாம். - -

உலகில் வாழும் மக்கள் அனைவரும், ஒத்த நிலை யினராக, ஒத்த கருத்தினராக இருத்தல் இல்லை. உலகின் இயற்கைத் தோற்றங்களைக் கண்டு மகிழும் கண்களைப் பெற்று வாழும் மக்களிடையே அக்கண்களையும் பெறாத மக்களும் வாழ்கின்றனர்; இயற்கைப் பொருள்களின் இன் னோசையைக் கேட்டு மகிழும் காதினைப் பெற்று வாழும் மக்களிடையே, கேளாக் காதைப் பெற்று விளங்கும் மக்க ளும் உளர்; பல்வகை முயற்சியால்,பயன்பல பெற்று வாழ். தற்கெதுவாய கால்களைப் பெற்று வாழும் மக்களிடையே முடம்பட்ட மக்களும் நின்று காட்சி அளிக்கின்றனர். இவ்வாறு உலகை ஒரு முறை நோக்குவார் ஒவ்வொரு வரும், உலகம், "காணார், கேளார், கான்முடப்பட் டோர், பேணுநர் இல்லோர், பிணி நடுக்குற்றோர்"