பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 129

முதலாய பல்வேறு மக்களையும் கொண்டு விளங்குவதைக் காண்பர். தாங்களே முயற்சி செய்து பொருள்பெற்று, உண்டு வாழ்தற்கியலாத நிலையில் உள்ள இவர்களும், இவர்தம் உயிர், உடலைவிட்டு நீங்கும் வரை பேணப்பட வேண்டியவராகவே உள்ளனர். உயிர் நின்ற உடல் பேணப்படுதல் வேண்டுமாயின், அதற்கு உண்டி இன்றி யமையாததாகும்; "உண்டி முதற்றேஉணவின் பிண்டம்." தாமே முயற்சி செய்து உயிரைப் பேணிக்கொள்ள இயலாத நிலையில் உள்ள இவர்தம் உயிரை, உண்டி கொடுத்துப் பேணுவார், இல்லற நெறியில் நிற்பவரே யர்வர். "துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், இறந் தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை" என்பது .திருக்குறள். இவ்வாறு, தாம் மட்டில் உயர்நிலை உலகம் எய்தி இன்புற முயலாது, பிறரையும் பேணி உட னழைத்துச் செல்லும் இவ்வில்லறத்தார் செயல் போற்று தற்குரியதேயாம்; இந்நெறியே, தம் தொண்டினைத் தவறாது செய்து வருவார், பிறர் அரிதிலே முயன்று பெறும் உயர்நிலை உலக இன்பத்தை எளிதில் அடைவர் என்பது உறுதி. 'தன் கடன் அடியேனையும் தாங்குதல், என் கடன் பணி செய்து கிடப்பதே" என்பர் காவரசர். இவ்வாறு, தம் உடன் வாழும் மக்களுக்கும் நன்மை பல செய்து அவரையும் தாம் பெறும் உயர்நிலை உலகத்தைப் பெறச் செய்யாது தாம் மட்டில் தனித்துப் பெற விழைவது அறமல்ல செயலாம் என்பதை,

'துயர்நிலை உலகம் காத்தல் இன்றி, நீ

உயர்திலை உலகம் கேட்டனை ஆயின், இறுதி உயிர்கன் எய்தவும், இதைவ்! பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே? தன் உயிர்க்கு இனங்கான், பிறஉயிர் ஒம்பும், மல்டியிர் முதல்வன் அறமூன்தன்றால்: புதிமாறுதர்ந்தனை முன்னணி”