பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 காவிரி

வாம்; மூங்கிவை நோக்குகின்றான்; உள்ளே வயிரம் அற்று, வெற்றிடம் பெற்றுள்ளது; மரத்தை நோக்கு கின்றான், இடைப்பகுதி வயிரம் முற்றிச் சிவந்து தோன்றுகின்றது. அன்றியும் மூங்கிலைப் பலரும் வேருடன் களைந்து எடுத்துச் செல்கின்றனர். ஆனால், மரத்தைக் களைய மனத்தாலும் நினைக்கிலர்; அன்றி யும், காற்றாலும் மழையாலும் வீழ்ந்துகிடக்கும் மரத் தின் சிறுசிறு பகுதிகளையும், பொன்போற் பேணி எடுத் துச் செல்கின்றனரே அன்றி, அம் மூங்கில்களை ஒரு பொருளாக மதித்தலும் செய்கிலர். இக்காட்சியைக் கண்ட அவன் உள்ளம், அதை அப்படியே ஆசிரியனுக்கு எடுத்துக்கூறி, அதனால் தான்் அறிந்த உண்மைகளையும் விளக்குகின்றது. -

'மூங்கில்போல் உள்ளத்தே உரம் அற்றவரே பகை வரைப் பணிந்து ஒழுகுவர்; மரம்போல் உரம் மிகப் பெற்றோர், துன்பம் உற்ற இடத்தில் உயிர்விடுவரே யல்லால் பற்றலரைக் கண்டு பணிந்தொழுகார்: ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே, கெட்டான் எனப்படுதல் நன்று, காற்றாலும் மழை யாலும் அழியாது நிற்பினும், அம்மூங்கிலைப் போற்று வார் ஒருவரும் இலராதல் போல, துன்பம் கண்டு அஞ்சிப் பகைவரைப் பணிந்து ஒழுகுவாரை உலகம் போற்றாது; அவரை அறிவதும் இல்லை. "கணம் கணம் தோன்றிக் கனம் கணம் மறையும் பினம்பல; இவரெல்லாம் பிறந் தார் என்பவோ?’ ஆணிவேரும் அற்று விழுந்துவிடினும், மரத்தின் சிறுபகுதியும் பயன்படுதல் குறித்து அறிந்தோர் அதனைப் பெரிதும் பேணுதல் போல, உரனுடைக் கொள்கையால் உயிரிழக்கப்பெற்றோர் அறிவுடையோர் உள்ளத்தே பொன்போல் பொதித்து வைக்கப்படுவாக ஆதலின், உள்ளத்தே உரம் மிகப் பெற்றுள்ளேன்: