பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 strestif

"அவர் (கோசர்) இடம் நெய்தலஞ்செறு எனச் சில அடிகள் குறிக்கின்றன" என்று கூறி, அதற்கு ஆதாரமாக, 'கோசர் இளங்கள் கமழும் நெய்தலஞ் செறுவின் வளங்கெழு நன்னாடு” என்ற செய்யுளைக் காட்டுவர் திரு: பிள்ளையவர்கள். வயல்களில் நெய்தல் மலர்ந்: திருக்கும் காட்சிகள் பல சங்க இலக்கியங்களில் காணப்படு கின்றன; 'செறுவில் கள்நாறு நெய்தல்' (குறுந் : 295) "செறுவில் பூக்கும் நின்னூர் நெய்தல்" (குறுந் : 309); கரந்தைக் கொடி விளைந்த வயல் 'கரந்தையஞ்செறு’ (அகம் : 226) என அழைக்கப்படுவதுபோல், நெய்தல் மலர்ந்த வயல் 'நெய்தலஞ்செறு" என அழைக்கப்படுதல் சங்க இலக்கிய மரபு. ஆதலின், கோசர் இளங்கள் கமழும் நெய்தலம் செறுவின் வளங்கெழு நன்னாடு' என்ற அப் பகுதி, 'புதிய தேன் மணக்கும் நெய்தல் மலர்கள் மலர்ந்த அழகிய வயல்களையுடைய கோசர் நாடு" எனப் பொருள்படுமே ஒழிய,'நெய்தலஞ்செறு என்ற பெயரால் ஒரு இடம் உளது; அது கோசர்க்குரியது” என்று. பொருள் கொள்ள இடந்தராது.

"வாட்டாறு என்ற ஊரையும்,செல்லூர் என்பதனை யும் ஆண்ட எழினி ஆதன் என்பவனைக் கோசர் எதிர்த் தனர்; அவன் செல்லூர்க்குக் கிழக்கே கோசரோடு போரிட்டு வேல் மார்பில் தைக்கப்பெற்று இறந்தான்்” என்று கூறி, அதற்கு ஆதாரமாக,

'அருந்திறற் கடவுள் செல்லுனர்க் குணா அது

பெருங்கடல் முழக்கிற்றாகி, யானா இருப்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் கடுங்கண் கோசர் நியமம்.' - அகம் : 90

'கடலாடு மகளிர் கொய்த ஞாழலும்

கழனி உழவர் குற்ற குவளையும்