பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gಖdit. கா, கோவிந்தன் 15t.

கொடுமைக்குப் பழிவாங்குதற் பொருட்டே, திதியன் கோசரை அழித்தான்் என்று தெளிவாகக் கூறப்பட்டிருப்ப வும், 'கோசர் சோழ நாட்டை அடைந்து அழுந்துார் வேளான திதியனைத் தாக்கினர்' எனப் பிள்ளையவர்கள் கூறுவது? சிறிதும் பொருந்தாது.

கோசர் பெருவீரராய் விளங்கினர் என்பதை அறிவிக் கும் பழந்தமிழ்ப் பாக்களே, அவர்கள் போர்ப்பயிற்சி பெறும் முறையையும் விளக்கிக் கூறிகின்றன.இளங்கோசர் பலர் கூடிப் படைக்கலம் பயிலுங்கால், தம் பயிற்சிக்குத் துணையாக,முருக்க மரத்தான்் இயன்ற இலக்கை வைத்து, அதன்மீது படைக்கலம் எறிந்து அழிக்க முயல்வர் என்ற செய்தியைக் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்ற புலவர் அறிவிக்கின்றார். இச்செய்தியை அறிவிக் கும் புறநானூற்றுச் செய்யுளையே ஆதாரமாகக் கொண்டு, "சேரன் தான்ைத் தலைவனும், முதிரமலைத் தலைவனுமான பிட்டங்கொற்றன் என்பானைக் கோசர் தாக்கினர்; போர் நடந்தது; முடிவு தெரியவில்லை”* என்று முடிப்பர் திரு. பிள்ளையவர்கள். அப்பாட்டைப் பாடிய புலவர், அப்பாட்டுடைத் தலைவனாகிய பிட்டங் கொற்றணின் Gt irriř# சிறப்பைப் பாராட்ட, "இளங்கோசர் படைக்கலம் பயிலுங்கால், பலமுறை தம் படைக்கலத்தை, முருங்கை மரத்தான்ியன்ற இலக்கின் மீது எறியினும், அம்மரம் அழியாது நிற்பதைப்போல, நீயும் நின்னொடு பொருவார் நின்மீது படைக்கலம் பல எறியினும் அவற்றால் தொலையாது வெற்றி பெறு கின்ற னை” என்று கூறுவதல்லது, பிட்டங்கொற்றனுக்கும் கோசர்க்கும் பகை உண்டு என்பதையோ, கோசர் அவ னோடு போரிட்டனர் என்ற செய்தியையோ அறிவிக்க

2. சோழர் வரலாறு : 36. 3. சோழர் வரலாறு: 35.