பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா: கோவிந்தன் 153

யோனும், மதுரை நகர்க்கண் வாழ்வோனும்," ஆகிய அகுதை என்பானைக் காவல் செறிந்த இடத்தே வைத்துப் பாதுகாத்தனர் கோசர், கோசர் நன்னனோடுபோரிட்டு அவன் படைவலி அறிந்துள்ளனராதலின், அவனால் அழிவுறாவண்ணம் தடுக்கவே. அகுதையைத் தாம் பாதுகாத்தனர் எனக் கொள்ளுதல்கூடும் நன்னன் மாமரத்தை வெட்டியது, தனக்கும், தன் நண்பன் மிஞரிவிக்கும் பகைவனாகிய வெளியன் வேண்மான் ஆஅய் எயினனோடு நட்புப் பூண்டு அவன் உரிமை மகளிர் துயர் போக்கியமையால், தனக்குப் பகைவனாகிய அகுதை என் பானுக்கு அடைக்கலம் அளித்தமையால் நன்னன் தம்பால்கொண்ட பகை காரணமாதலும் கூடும்.

தமக்குப் பகையாவர் எனக் கருதியோரையெல்லாம் அழிப்பதையே தொழிலாகக்கொண்ட கோசர், தமக்குப் பணியாது நின்ற மோகூரைத் தாக்கினர்; மோகூர் பணிந் திலது; ஆகவே கோசர்க்குத் துணையாக மோரியர் என் பார் வந்தனர்; போரின் முடிவுதெரிந்திலது. இம்மோகூர்

4. அகம்: 76, 113: புறம்: 233: குறுந்: 298. 5. புறம்: 347, 6. "புன்தலை மடப்பிடி அகவுநர் பெருமகன்

அமர்வீசு வண்மகிழ் அஃதைப் போற்றிக் காப்புக்கை நிறுத்த பல்வேற் கோசர்"

-அகம்: 113. 1. "வெல்கொடித்

துணை காலன்ன புனைதேர்க் கோசர் தொன்மூதாலத்து அரும்பணைப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியாமையிற் பகைதலைவந்த - மாகெழுதான்ை வம்ப மோரியர்' -அகம்:251