பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘164 &siteŵiff

தன் ஆணைவழி அடங்கி யிருக்கச் செய்து, ஆட்சிபுரிவது இன்றும் காணக்கூடியதே; இதைத் தமிழர்கள், அன்றே உணர்ந்து, அக்கால அரசர்க்கு உணர்த்தி வந்தனர்; "பகடு புறந்தருநர் பாரம் ஒம்பிக் குடிபிறந்தருகுவையா யின், நின் அடிபுறம் தருகுவர் நின் அடங்காதோரே, ! இது, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நோக்கி, வெள்ளைக்குடி நாகனார் என்ற உழவர் உரைத்த அறிவுரை. “பலகுடை நீழலும், தம் குடைக் .கீழ்க் காண்பர்; அலகுடை நீழலவர்” இ."இது வள்ளுவர்

வழங்கிய அறிவுரை.

ஒரு நாட்டைப் போரிட்டுக் கைப்பற்ற விரும்புவோர் முதற்கண் அந்நாட்டில் வாழும் மக்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்கள், பிற நாடுகளிலிருந்து, உட்புகா வாறு, அந்நாட்டைச் சூழ உணவு முற்றுகையிடுவர்; இதனால், தன் நாட்டு மக்களுக்கு உணவு இல்லாமை யுணர்ந்து, அந் நாட்டரசன் பகைவர்க்குப் பணிந்து போவன்; ஒருநாடு போரில் தோலாது நின்று வெற்றி பெற விரும்புமாயின், அது, உணவிற்காகப் பிறநாட்டை எதிர்நோக்காது, தனக்கு வேண்டிய உணவைத் தான்ே விளைத்துக் கொள்ளும் பெருவளம் உடையதாதல் வேண்டும்; அந்நிலையிருந்தால், அந்நாடு, பகைவர் உணவு முற்றுகை மேற்கொள்ளினும், அவர்க்குப் பணி யாது நின்று வெற்றி பெறல் கூடும். இந்த உண்மையினை யும், அன்றைய தமிழர்கள் உணர்ந்திருந்தனர்.

பாரி ஒரு குறுநிலத் தலைவன்;சிறந்த கொடையாளி; பறம்பு என்ற மலையையும், அதைச் சூழ உள்ள முந் 'நூறு ஊர்களையும் ஆண்டுவந்தவன்; இவன் புகழ் பரவ வாழ்வதைக்கண்ட மூவேந்தர், இவனை வென்று அழிக்க ஆசைகொண்டனர்; நால் வகைப் படையும் கொண்டு; அவன் மலையை முற்றுகையிட்டனர்; பலநாள் ஆகியும்