பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினும்,தங்கிய நீர்ப்படை தகவோ வுடைத்து' (சிலப். 25; 120; 121.) என்றும், 'அந்தம் அறியாத அருங்கல முந்திக்: கந்தங் கமழ் காவிரி (சம். தேவா.) என்றும், "பூவிரி புது நீர்க் காவிரி (புறம், 166) என்றும், 'மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ வாடை யதுபோர்த்து' (சிலப். 'கானல்.) என்றும், "மந்த மா யிழிமதக் களிற்றிள மருப் பொடு பொருப்பின் நல்ல, சந்தமார் அகிலொடு சாதியின் பலங்களும் தகைய மோதி உந்துமா காவிரி' கறியுமா மிள கொடு கத லியின் பலங்களும் கலந்து நுந்தி, எறியுமா காவிரி' (சம். தே.) என்றும்,'விளங்குமா முத்தினோ டின மணி.யிடறி யிருகரைப்பெருமரம் பீழ்ந்து கொண்டெற் றிக் கலங்குமா காவிரி’ (அப்பர். தே.) என்றும் வருவன வற்றாலறிக.

காவிரியின் நீர் கங்கை நீர் என்றும், இதில் ஐப்பசித் திங்களில் கங்கைநீர் வருகின்ற தென்றும், அது காலை இதில் மூழ்கின் புண்ணிய முண்டா மென்றும் கருதி மக்கள் பலர், மாயவரத்தில் மூழ்குவதை இன்றும் நாம் காண்கின் றோம். காவிரி நீர் கங்கைநீர் என்பதனை, காவிரிநீர் கங்கை நீராதலின்' (சிலப். 10; 106-108 உரை) என அடியார்க்கு நல்லாரும், தொல்காப்பியப் பாயிரத்தில் "கங்கையா ருழைச் சென்று காவிரி யாரை வாங்கி' என நச்சினார்க்கினியரும் கூறுமாற்றானறிகது -

காவிரி, கங்கை உண்மையால் உண்டாய வடதிசைப் பெருமையையும், தென்திசைச் சிறுமையையும் நீக்குவான் வேண்டி உண்டாயது என்ப. இதனை,'வருநற்கங்கை வட திசைப் பெருமையும், தென்திசைச் சிறுமையும் நீக்கிய குறுமுனி, குண்டிகைப் பழம்புணர் காவிரி" (திவாகரம்) என வருதலான் அறிக.

-தமிழ்ப் பொழில் 1935-36 பக்கம் : 444