பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பாராய்ச்சி

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி பதிப் பாசிரியர், திரு. S. வையாபுரி பிள்ளை, B.A.,B.L., அவர் களால், பரிசோதிக்கப்பட்டு திரு. S. கனக சபாபதி. பிள்ளையவர்களால் வெளியிடப் பெற்ற தொல்காப்பியப் பொருளதிகார முதற்பாகம், பயிலும் பலர்க்கும் பேருபகாரமாக விளங்குகின்றது. அதனை, ஊன்றிப். படித்து வருங்கால், அதனுட் பொருந்தாப் பாடங்கள் சில விளங்குவதைக் கண்டேன். அப்பாடங்களை அவ்வாறே கொள்ளின், உண்மைப் பொருள் காண வியலாது, குன்று முட்டிய குரீஇப் போலவும், குறிச்சிபுக்க மான் போலவும், பயில்வோர் இடற்படுவர் ஆதலின், உண்மைப் பாடங் களை வெளியிடின், அவர்க்கு நன்மை பயக்கும் என்று கருதி இதனை எழுதலானேன்.

சேனாவரையர் போன்ற பேராசிரியர்களும், முக்குண: வயத்தான்் முறை மறந்தறைவர் எனின், நம்போன்றார் இவ்வாறு மயங்குதல் வியப்பேயன்று. பெருங்கல்லியும், பேரறிவும், ஒருங்கே வாய்ந்த நுண்மானுழைபுலத் தமிழ். மாண் புலவராய அவர், அதுபற்றி இகழவும் படார்; அதனால் அவர் புலமை நலம் கெடவும் மாட்டாது. யானும் அக்குணவய்த்தான்் மாறுபடக் கூறவும். கூடுமாதலின், யான் கூறுவதே மெய்ம்மையுரை யென்