பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:புலவர். கா. கோவிந்தன் 19

என்ற செய்யுள் நச்சினார்க்கினியரால் காட்டப் பட்டுள்ளது. -

அச்செய்யுள், 'கார்ப்பருவத் தொடக்கத்தே மீண்டு வருவல்” எனக் கூறிப்பிரிந்து சென்ற தலைவன், அப் பருவம் எய்தவும் வாராததினால் வருந்திய தலைவிக்குத் தோழி, அப்பருவம் வந்தமையைக் காட்டி அவர் வருவார் நிற்பாரல்லர் என வற்புறுத்தியதாகத் துறை கூறுகின்றது. அச்செய்யுளின் பொருள் கண்டன்றி அதனை ஆராய்தல் இயலாதாகலின் அதற்கு ஒர் உரையொன்று ஈண்டுத் தருவல்,

முல்லை வைந்துணை.................... படர்ந்தே."

என்றது, தோழி தலை மகளைப் பருவங்காட்டி வற்புறுத் தியது, எனத் துறைப் பெயர் பெற்றது. 'குறித்த காலம் வந்தது, அவரும் வந்தார் என ஆற்றுவித்தது' என்பர் நச்சினார்க்கினி யார். (தொ. பொ. 3) -

உரைப்பாடம் :- விழவின் உறந்தைக் குணாது குன்றத்து அலரின் நாலும் அரிவை உதுக்காண்; தோன்ற அவிழ, தெறிப்ப, புறக்கொடுப்ப, வானம் கானத்தில் சிதற, கார்செய்தன்று; (அதனால்) நாடன், பறவை பேதுறல் அஞ்சி, ஆர்த்ததோன், புரவி வள்பரிய நின் நலம் படர்ந்து தோன்றும் என்பது. -

உரை :- பலராமனும், பலகாலும் புகழுதற்குரிய சிறப்பு வாய்ந்த விழவினையுடைய, உறையூர்க்குக் கீழ்ப் பக்கத்ததாகிய நெடிய பெரிய சிராப்பள்ளி மலையின் கண், மிக்கிருக்கின்ற காந்தட்போதுகள் மலர்ந்த அல ரினைப்போல மணம் வீசும், ஆராய்ந்து அணிந்த தொடி யினையுடைய அரிவையே! உவ்விடத்தே பார். முல்லை