பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 43

ஐயாறன் அடித்தலமே" (நாவரசர். ஐயாறு. 4 : 92 : 6) என்று நாவரசப் பெருந்தகையார் கூறுமாறும் உணர்க. அழகியார் இக்குறளை, ஏகதேச உருவக அணியாகக் கொண்டார். மணக்குடவர் அவ்வாறு கொண்டிலர்.

9 'கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத் தான்்

தாளை வணங்காத் தலை”

மணக்குடவர் உரை :-அறிவில்லாத பொறிகளை யுடைய பாவைகள் போல, ஒருகுணமும் உடையனவல்ல, எட்டுக்குணத்தினை யுடையவன் திருவடியினை வணங் காத தலையினை யுடைய உடம்புகள், உயிருண்டாகில் வணங்குமென்றிழித்து உடம்புகள் என்றார். என்பது.

பரிமேலழகர் உரை :-தத்த மக்கேற்ற புலன்களைக் கொள்கையில்லாத பொறிகள் போலப், பயன்படுதல் உடையவல்ல; எண்வகைப்பட்ட குணங்களையுடை யானது தாள்களை வணங்காத தலைகள், என்பது.

இக்குறளிற்கு, இருவர் உரையும், பொருள் அளவில் பொருந்துமாயினும், சொல்லளவில் பொருந்துதல்இல. அழகி யார்,'கோளில் பொறி","தலை’ என்பவைகளுக்கு முறையே "தத் தமக்கேற்ற புலன்களைக் கொள்கை யில்லாத பொறிகள் என்றும், தலைகள் என்றும் இயற் பெயராகவே கூறியுள்ளார். மணக்குடவர், அவைகளுக்கு முறையே, அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள்

  • Footprints that perhaps another, Sailing O’er life’s solemn main A forlorn and shipwrecked brother, - Seeing,shall;take heart again.—H. W. Longfellowe