பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் $9.

6: உலகம் தன்னிலையிலேயே இயங்கவிட்டு விடுதல்ே நலமுடையதாகும் என்பர் வேறு ஒருசாரார்.

7. மேற்கூறிய முறைகளுள் ஒன்றுகூட நன்கு நடை. பெறக் கூடியதன்று; ஒருவர் எத்தகையராக இருப்பினும் சரி, அவர் எவ்வளவு பெரியவராக இருப்பினும் சரி, அவர் எத்தகைய வேலையைச் செய்பவராய் இருப்பினும் சரி. அவர்கள் சமகூறுபெறுதலே நடைபெறக் கூடியதும், நலமுடையதுமாய திட்டமாகும் என்பர், பொது வுடைமைக் கொள்கையாளர்.

இனி, இவர்கள் கூறும் முறைகள் ஒவ்வொன்றினையும் தனித்தனியே ஆராய்ந்து மேற்கொள்ளக்கூடிய முறை யைக் கைக்கொள்ளுதலே, நாம் செயற்பாலதாகலின், அவரவர்தம் கூற்றுக்களைத் தனித்தனி உற்றுநோக்குவாம்

ஒருவர் தன் தனிப்பட்ட உழைப்பின் பயனாக, உலகிடை எவ்வளவு பொருள்களை உண்டாக்கு கின்றாரோ, அவ்வளவு பொருள்களையும் அவர் தாமே யடையலாம் என்ற முறை, நோக்குவார்க்கு நலமுடைய தாகத் தோன்றினாலும், அதை நடைமுறையில் கொணர்வுழி, முதலாவதாக உலகிடை, ஒவ்வொருவனும் எவ்வளவு பொருளை உண்டாக்கினான் என்பதையறிவது முடியாதகாரியமாகவும், உலகில் செய்யப்படுகின்ற வேலைகள் முற்றும், உருவப்பொருள்களை உண்டாக்கு வன வோ, இயற்கைப் பொருளை மாற்றியமைப்பன வனவோ, நில்லாது, பல வேறுபட்ட உழைப்பாகவும் விளங்குவதைக் கண்டு வருத்தவேண்டியவராகவே இருக் கின்றோம்: -

ஒரு பயிர்த்தொழிலாளியும், அவனுடைய வேலை யாட்களும், உழுது, விதைத்து, அறுவடையாக்குகின்றனர்