பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$76 காவிரி

போன்றே, மேனாட்ட்றிஞரும் கூறுவர். அன்னார் அது பற்றிக் கூறுவனவற்றுள், சிலவற்றினை ஈண்டுக்கூறுதும்.

பருமையும், அழுத்தமும், பலமும் உடைய கைகளை யுடையவள், வினைசெய்தற்கண் சோர்வடையாத ஊக்க. முடையனாயும், அங்ங்ணமின்றி மெலிந்து அழுத்தமற்ற சைகளையுடையான், ஊக்கங்குறைந்தவனாயும் தனக்கென வாழும் இயல்பினனாயும் இருப்பன்.

நீண்டு அகன்ற கைகள், விரிந்த நோக்கம் (Broad view), பொருள்களைக் கடிதிற் காண்டலும், மறவாமையு முடைய நுண்மாண் நுழைபுலம், வினைசெய்தற்கண் மனவெழுச்சி, பல பொளுள் நல்லன எண்ணித் துணிதல், தொடங்கிய தொழிலை விரைந்து செய்தல் என, இவை யுடைமையினை வெளியாக்கும். மற்று நீண்டு குறுகிய கைகள், பல காரியங்களைத் தொடங்கி, சிலவற்றில் வெற்றி பெறும் இயல்பு, தனக்கென வாழ்தல் என, இவை புடைய ைமயினை வெளியாக்கும்.

இனி, நீண்ட விரலுடையார், ஆழ்ந்து எண்ணும் இயல்பினராவார். கணக்குப் பரிசோதகர், வழக்கறிஞர், மருத்துவர் முதலாயினார், இத்தகைய விரலுடையராய் இருப்பர். குறுகிய விரலுடையார், பொருள்களின்மேல் கண்ணோக்கமுடையராயும், நூற்பொருளைக் கடிதிற் கொண்டு, மறவாது, கற்றாங்கு நிற்பவராயும், காரியங் களைக் கடிதிற் செய்யும் இயல்பினராயும் இருப்பர். உயர்ந்தோர் எனப்படுவார், இத்தகைய விரலுடையாரே இபாவர்.

நீண்ட கணுக்கள் பொருந்திய விரல்களையுடையார், காரியங்களில் விரைந்து செல்லாது, செல்லுதற்கு முன்னர், நன்கு ஆராய்ந்து, காலம் தாழ்ந்தே