பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 Errestliff

றோம்; ஒரு வினையைச் செய்து முடித்தல் வேண்டும் எனத் தொடங்குவான் ஒருவன் அதை இடையில் மடங் காது செய்துமுடிக்க விரும்புவானாயின், அவ்வினையைத் தொடங்குவதற்குமுன், அவனால் எண்ணித் துணியப்பட வேண்டுவன பலவாம். முதற்கண் தான்் செய்யத் தொடங்கிய வினை பழியொடு படராப் பண்புடைய வினைதான்ா என்று நோக்குதல் வேண்டும். பின்னர் அவ்வினையைச் செய்யுழி உளவாம் அழிவுப் பொருளின் அளவினையும், அவ் வினை முட்டின்றி முடிந்தால் உளவாம் ஆக்கப் பொருளின் அவாவினையும் சீர்தூக்கிப் பார்த்து, அழிவுப் பொருளினும், ஆக்கப் பொருள் மிக்கிருப்பின் அவ்வினையைச் செய்யத் துணிதல் வேண்டும். பிறகு, அவ்வினையினது வலியையும், 'நல்ல காரியத்திற்கு நானுாறு இடையூறு' என்பவாகலின் அவ் வினையைச் செய்ய ஒட்டாமல் தடை செய்வார்தம் வலியையும் ஒருபால் நிறுத்தி, அவ்வினையைச் செய்யும் தன் வலியையும், தனக்குத் துணையாவார்தம் வலியை யையும் வேறு ஒருபால் நிறுத்தி ஒப்பு நோக்கி, முன் னிரண்டு வலியைக் காட்டிலும், பின் இரண்டு வலி மிக்கிருப்பின் அவ்வினையைச் செய்யத் தொடங்குதல் வேண்டும். தொடங்குங்கால், அவ்வினை முட்டு இன்றி முடிதற்காம் காலத்தையும் இடத்தையும் தேர்ந்து கொண்டு, அஞ்சாமை, ஊக்கம் முதலிய குணங்களுடன் செய்யத் தொடங்கி, இடையே இடுக்கண்கள் பல அடுக்கிவரினும் அவை கண்டு அஞ்சாது, மெய்வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துயிலாது, எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளாது, செவ்வி அருமையும் பாராது, அவமதிப்பும் கொள்ளாது, கருமமே கண்ணாய் இருந்து அவ்வினையைச் செய்து முடித்தல் வேண்டும். இவ்வாறு பேரிடர்ப்பாட்டினுக் கிடையே அவ் வினையைச் செய்து முடித்தான்், அவ் வினையாலாம் பயனைப் பெறுங்கால்,