பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

ஒன்பதாவதாக, ஊழலும் மந்தமும் நிறைந்த அரசாங்க நிர்வாகத்தின் அழுத்தமும் பெரும் பாரம்ாக விவசாயிகள் மற்றும் இதர கிராமப்புறப் பாட்டாள்ளிகள் மீது தான் விழுகிறது.

ரெவின்யூ அதிகாரிகள்- பணியாளர்கள், பஞ்சாயத்து அதிகாரிகள்-பணியாளர்கள், வரிவசூல் அதிகாரிகள்பணியாளர்கள், மின்சாரவாரிய அதிகாரிகள்-பணியாளர் கள் போலீஸ் அதிகாரிகள்-காவலர்கள் இதர பலவேறு துறை அரசாங்க நிர்வாகிகள் அதிகாரிகள் பணியாளர்கள் வன இலாகா அதிகாரிகள் ஊழியர்கள் அனைவருக்கும் கிராமப்புற விவசாயிகளும் பாட்டாளிகளும்தான் வேட்டைக்காடாக அமைந்திருக்கிறார்கள் ஒரு சான்றிதழ் வேண்டுமா, ஒரு கையெழுத்து வேண்டுமா, ஒரு மின் இணைப்பு வேண்டுமா, ஒரு பியூஸ் காலிற்கு கூப்பிட வேண்டுமா, ஒரு லோன் போட வேண்டுமா, ஒரு பட்டா வாங்க வேண்டுமா எது வானாலும் , அதற்கு வட்டம் செலுத்த வேண்டும், ‘அன்பளிப்பு செலுத்த வேண்டும்.

அத்துடன் கிராமப்புறப் பாட்டாளிகளின் குழந்தைகள் படிக்கவும் இதர வசதிகள் பெறவும், வைத்திய வசதி முதலியவை பெறவும், அவர்கள் படும்பாடு சொல்ல முடியாது.

அரசாங்க எந்திரத்தின் இந்த அழுத்தமும் விவசாயிகளின் இடுப்பை முறிக்கிறது.

இத்தனை நெருக்கடியும் விவசாயத் தொழிலில் தேக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. இந்த தேக்கத்திற்குக் காரணம் முதலாளித்துவ சுரண்டல் முறையும் அரசாங்க எந்திரத்தின் சுமையுமாகும்.

இந்த நெருக்கடியிலிருந்து விவசாயமும், விவசாய த் தொழி லும் நாடும் மீளவேண்டு மானால், முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு முறையை மாற்ற வேண்டும். அரசாங்க நிர்வாகச் சீரமைப்பு செய்ய வேண்டும். வேறு

வழியில்லை.

எனவே இன்றைய விவசாயிகளுக்கு-அதாவது விவசாயத் தொழிலாளர்கள் சிறுவிவசாயிகள் நடுத்தர விவசாயிகள் பெரிய விவசாயிகள் முதலிய எல்லாப் பிரிவு விவசாயி களுக்கும்-கிராமப்புறப் பாட்டாளிகள் அனைவருக்கும் முக்கிய எதிரியாக முன்னால் நிற்பது முதலாளித்துவச் சுரண்டல் முறையும் முதலாளித்துவ ஆட்சி முறையுமாகும்.

இந்த சுரண்டல் ஆட்சிமுறைக்கு எதிராகவிவசாயிகள் ஒன்று படவேண்டும். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுடன் சேர்ந்து ஆட்சி முறையை மாற்றுவதற்கும் முன் வந்தால் தான் இன்றைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்.