பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனரி வாசன் C 113

நெசவாளர் பட்டினிப் பட்டாளம், சென்னை வந்து சேர்ந்த போது சென்னையிலும் எல்லா வட்டங்களிலும் அவர்களுக்கு வரவேற்பும் ஆதரவும் கெ டுக்கப் பட்டது. முடிவாக, அவர்கள் மாநில அரசின் தலைமைச் செயலகத் தி ற்குச் சென்று மறியல் செய்தார்கள்.

அப்போது சென்னை மாகாண அரசின் முதலமைச்சராக சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இருந்தார். மறியல் செய்த நெசவாளர் பிரதிநிதிகள் முதலமைத்சரைப் பார்த்தார்கள். த்ங்கள் கோரிக்கை சாசனத்தைக் கொடுத் தார்கள். அவர்களுடைய கோரிக்கைகளில் பல அrசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, உடனடியாக அன்றைய ஸ்ரீவில்லி புத்துார் தாலுகா முழுவதிலும் உள்ள நெசவாளர்கள் குடியிருக்கும்பகுதிகளிலும் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சத்திரிப்பட்டி, ராமச்சந்திாபுரம் சுந்தரபாண்டியம் முதலிய இடங்களிலும் பின்னர் அருப்புக் கோட்டையிலும் அரசின் சார் பில் கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டு இலவசமான கஞ்சி உணவு பட்டினி கிடக்கும் நெசவாளர்களுக்கு வழங்கபபடடது.

நெசவாளர்களுக்குக் கூட்டுறவு சொஸைட் டிகள் மூலம் உதவி செய்ய செஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் கூட்டுறவு சொஸைட்டி ரிபேட் உதவி

கொடுக்கிப்பட்டது. நெசவாளர் பெரும்பாலும் கூட்டுறவு சொஸைட்டிகளின் கீழ் கொண்டு வரப்பட்டார்கள். அதன் பின்னர், நெசவாளர்களுக்குச்சற்று நிவாரணம் கிடைத்தது.

இந்த ‘தமிழ் நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் பட்டினிப் பட்டாளப் போராட்டம்’ உலக புகழ் பெற்று விட்டது. தமிழ் நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம் மேளனத்தின் மூலம், ஏ.ஐ.டி யு சி மாநாட்டிலும் மாநாட்டு அறிக்கைகளிலும், உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் அறிக்கையிலும் இந்தப் போராட்ட விவரங்களும் நிகழ்ச்சி களும் குறிப்பிடப்பட்டு, அது இந்தியாவின் தொழிலாளர் ப்ோராட்ட வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது.

தமிழகத்தில் இப்போது பட்டு நெசவில், மிகவும் நேர்த் தியான ப்ட்டுத்துணிகள் புடவை, வேஷடி, துண்டு, ஆங்க வஸ்திரம் ஆகியவை ஜரிகை பார்டருடன் நெய்யப்படு கிறது. சேல்ம் பவானி போன்ற இடங்களில் ஜமக்காளம் நெய்யப்படுகிறது. கரூர், ஈரோடு, சென்னிமலை சேலம் முதலிய பகுதிகளில் பெட்வீட்டுகள் துப்பட்டி போர்வை முதலிய ரகங்கள் நெய்யப்படுகின்றன. சென்னை, செங்கல்பட்டு, தென்ஆற்காடு, வடஆற்காடு முதலிய இடங்களில் கைவிகள், லுங்கிகள் நெய்யப்படுகின்றன. மதுரை, இராமநாதபுரம்,காமராஜர், நெல்லை மாவட்டங்