பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

படைத் தவர்களாகவும் இருக்கிறார்கள். சில கிராமங்களில் இவர்களே கிராம ஆதி க்கம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத் தில் இவர்கள் பெரும்பாலும் சுதேசி மன்னர்கள், ஜமீன் தார்களின் சுரண்டல் முறைகளுக்கு ஆளாகியிருந்தார்கள் அந்நிய ஏகாதிபத்திய நிலப்பிரபுத்துவ சுரண்டல் முறைகளிலிருந்து விடுதலைபெற்ற பிறகு இப் போது இவர்கள் முதலாளித்துவ சுரண்டலுக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார்கள். முதலாளித்துவ சுரண்டல் முறை நமது நாட்டில் மேலும் மேலும் தீவிரமடைந்து வருகிறது: அதனால் ஏற்படும் பாதிப்பும் அதிகமாகிவருகிறது. அதில் இந்த நடுத்தர விவசாயிகள் பிரிவும் கடுமையாகப்பாதிக்கப் பட்டுள்ளார்கள். நீர்ப்பாசனம், கடன், வட்டிக் கட்டணம் வரி, உரம், பூச்சி மருந்து, விவசாயக்கருவிகள், எரிபொருள் விசைசக்தி, விளை பொருளுக்குக் கட்டுபடியாகும் விலை உபயோகப் பண்டங்களின் விலை உயர்வு, இாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகிய பிரச்சனைகளில், நடுத்தர விவசாயிகள் முதிலாளித்துவ சுரண்டல் முறையால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள் .

முதலாளித் துவப் பொது நெருக்கடியும், முதலாளித்துவ

ஆ ரசியல் நிர்வாகச் சீர்கேடுகளும் ஊழல்கள், அரசாங்க நிர்வாகத்தின் அழுத்தங்களும் இவர்களுடைய நிலை பாட்டைக் கடுமையாகப் பாதிக்கிறது.

நடுத்தர விவசாயிகள் சொந்த நிலவுடமையாளர்களாக இருப்பதால் இவர்களுக்கு நிலப்பற்று, சொத்துடமைப்

பற்று அதிகமாகவே உள்ளது. விவசாய வேலைகளில் இவர்கள் பெரும்பாலும் விவசாயத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி வேலை செய்வதால், அவர்களின்

உழைப்பையும் சு. டுைகிறார்கள். நடுத்தர விவசாயிகள் கிராமப் புறங்களில் குறிப்பிட்ட அளவில் சுரண்டும் வர்க்கமாகவும் அதே சமயத்தில் முதலாளித்துவ அமைப்பி னால் கடுமையாக சுரண்டப்படும் வர்க்கமாகவும் இருக் கிறார்கள்.

விவசாய உற்பத்தித் துறையில் நடுத்தர விவசாயிகள் ஒரு குறிப்பிடத் தக்க பங்கை ஆற்றுபவர்களாக இருக்கிறார் கள். அத்துடன் கிராமப்புற வாழ்க்கையிலும் மிக முக்கிய மான பங்கை ஆற்றுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

நடுத் தர விவசாயிகள் நிலவுடமையாளர்களாக இருப்ப தால் நிலப்பற்றும், தங்கள் நிலவுடமையை, சொத்துடமை LIM விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அதிகப் : படுத்திக் கொள்ள வேண்டும் என்னும் ஆசை உள்ளவர்