பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 15 1

களாகவும் இருக்கிறார்கள். ஆனால் இன்றைய முதலாளித் துவ சுரண்டல் முறையினால் அவர்களுடைய ஆசை நிறைவேறுவதில்லை என்பது மட்டுமல்ல, முதலாளித் துவ மார்க்கட் பொருளாதாரத்தால் நடுத்தர விவசாயி களும் நாளுக்கு நாள் கடுமையாக சுரண்டப்பட்டு ஒட்டாண்டிகளாகிக் கொண்டு வருகிறார்கள். கடனாளி களாகி வருகிறார்கள்.

கிராமப்புற விவசாயிகள்பட்டுள்ள கடன் பளுவில் இவர் களுடைய பங்கு மிகவும் கணிசமான அளவில் உள்ளது. விவ சாய உற்பத்தித்துறையில் தொடக்கத்திலிருந்து முடிவு வரை இவர்கள் முதலாளித்துவ அமைப்பால் சுரண்டப்படு கிறார்கள் என்று கூறலாம்.

நிலவரி, நீர்ப்பாசனவரி, மின்சாரக்கட்டணம் ஆகியவை களின் உயர்வும், பாக்கிகளும் இவர்களுடைய மென்னியைப் பிடிக்கின்றன. மின்கட்டணஉயர்வும், டிஸ்ல் விலைஉயர்வும். பஸ், லாரி ரயில்கட்டணஉயர்வும் உற்பத்திக்கருவிகளின் விலைஉயர்வும்.விவசாயிகளின் உற்பத்திச்செலவை உயர்த்தி, நடுத்தர விவசாயிகளைச் சேற்றில் அழுத்துகிறது. ரசாயன உர விலை உயர்வும், பூச்சி மருந்துகளின் விலை உயர்வும் பொறுக்கு விதைகளின் விலை உயர்வும் இவர் களின் கழுத்தை நெரிக்கிறது. அத்துடன் இந்தப் பொருள் தரக்குறைவும் விவசாயிகளின் அடி வயிற்றில் அடிக் spool.

தொடர்ச்சியாகவும் ஒவ்வொரு வேலைக்கும் விவசாயிகள் வாங்கும் கடனுக்கு வட்டியும் அபராத வட்டியும் வட்டிக்கு வட்டியும் அவர்களுடைய கழுத்தில் மாட்டியுள்ன சுருக்கை மேலும் இறுக்கிக் கொண்டிருக்கிறது. இப்போது விவசாயி கள் பட்டுள்ள கடன் சுமையும் அதன் வட்டிச் சுமையும் அவர்களுடைய சொத்து மதிப்பையும் தாண்டிப் போய்க்

கொண்டிருக்கிறது.

விவசாய உற்பத்திப் பொருள்களின் விலை தான் கடைசியாக விவசாயிகளை இப்போது முழுமையாக அழுத்திக் கொண் டிருக்கிறது. நடுத்தர விவசாயிகள் பெரும்பாலும் மார்க் கட்டிற்காகவே உற்பத்தி செய்கிறார்கள். இந்திய மார்க் கெட் இந்திய முதலாளித்துவத்தின் பிடிப்பிலும் உலக முதலாளித்துவ மார்க்கெட்டைச் சார்ந்தும் இருக்கிறது.

விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களின் விலை மூலம் அவர்கள் கொள்ளையடிக்கப்படுவது இதர வரி கட்டணம் வட்டி முதலியவைகளையும் மிஞ்சி விடுகிறது. அநேகமாக விவசாய உற்பத்திச்செல்வத்தில் பாதிக்கு மேல் முதலாளித் துவ சந்தை மூலம், விலையின் மூலம் சுரண்டப்படுகிறது. எனக் கூறலாம். இதனால் நடுத்தர விவசாயிகள் மிகவும்