பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O. 157

10 சிறுவியாபாரிகள் மற்றும் இதரவர்த்தகப் பிரிவுகள்:

கிராமப்புறங்களில் உள்ள வர்த்தகப் பிரிவுகள் இருவகைப் தாகும். ஒன்று பொது மக்களுக்கு தேவையான விவசாயிகளுக்குத் தேவையான பண்டங்களை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளாகும்.

இாண்டாவது விவசாயிகளிடமுள்ள பொருள்களை வாங்கி முதலாளித்துவ நிறுவன்ங்களுக்கு அனுப்பும் 4 ஜண்டுகள், தரகர்களாகும்.

இந்த இரண்டு பிரிவுகளும் முதலாளித்துவ அமைப்பு முறை யில் உள்ள உற்பத்திவினியோக முறையின் பகுதியாகும். முதலாளித்துவ முறையில் உள்ள வியாபாரமுறையே கழுத்தறுப்பு வேலையாகும். ஒருவருக்கொருவர் ஏமாற்றி மோசடி செய்து லாபம் சம்பாதிக்கும் தொழிலாகும்.

முதலாளித்துவ முறையில் வியாபாரம் என்பதே குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பதாகும். குறைந்த விலைக்கு வாங்குவது என்பது பொருள் உள்ளவரிடம் காபாற்றி அந்த சரக்கை பல வகையில் தரத்தைக் குறைத்துக் கூறி விலையைக் குறைத்து வாங்குவதாகும். அதிக விலைக்கு விற்பது என்பதும் வாங்குபவரை ஏமாற்றி விற்பனைப் பொருளைப்பற்றி உயர்த்திப் பேசி அதிக விலைக்கு விற்பனை செய்வதாகும். இரண்டிலும் ஏமாற்று கலே அடிப்படையாக அமைந்துள்ளது. விவசாயிகளுக்கு பண்டங்களை விற்பனை செய்வதிலும் விவசாயிகளிட மிருந்து அவர்களுடைய உற்பத்திப் பொருள்களை வாங்குவதிலும் அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

விவசாயத்திற்கு வேண்டிய இடு பொருள்களான விவசாய உற்பத்திக் கருவிகள், ரசாயன உரம், பூச்சி மருந்துகள் முதலிய பொருள்கள் மட்டுமல்லாமல், கிராமப்புற மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பண்டங்களான :து வணி, எண்ணெய், சர்க்கரை, வீட்டுக்கு வேண்டிய பொருள்கள், மின்சார சாதனப் பொருள்கள் முதலி யனவும். விலை ஏறிக்கொண்டே போகிறது. இதனாலும் விவசாயிகள் நாளுக்கு நாள் நஷ்டமடைந்து கொண்டி ருக்கிறார்கள். ஏழ்மையடைந்து கொண்டிருக்கிறார்கள்.

விவசாயிகள் வாங்கும் பொருள்களுக்கும் விற்பனை செய்யும் பொருள்களுக்கு மிடையிலான இடைவெளி விவசாயிகளுக்கு பாதகமான முறையில் நாளுக்கு நாள்

அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பொமப்புறங்களில் உள்ள சிறு வியாபாரிகளும் வர்த்த கர்களும் முதலாளித்துவ மார்க்கட் அமைப்பில் முதலாளி களுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் உள்ள ஏஜன்டு களாக தரகர்களாக, புரோக்கர்களாக இருக்கிறார்கள். இவர்கள் முதலாளித்வ அமைப்புடன் சேர்ந்த ஒட்டுண்