பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 .ெ இராமப்புறப் பாட்டாளிகனை தோக்கி

டிருக்கும் மிக முக்கியமான பிரச்சனையாகும் அதிலும் கிரா மப்புற மக்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வேலை செய்யும் உரிமையை அரசியல் சட்டபூர்வமான . உரிமையாக்க வேண்டும் என்பது இளைஞர் இயக்கங்களின் நீண்ட நாளைய முக்கியமான கோரிக்கையாகும். அது இப் போது சட்டத்தில் இடம் பெற்று விட்டது. அது செயல் படுத்துவதற்கான ந ைட முறைகளை உண்டாக்குவது அடுத்து செய்ய வேண்டிய வேலையாகும்.

ஐந்தாவதாக வானொலி தொலைக்காட்சி அமைப்புகளை ஒரு சுயேச்சையான அமைப்புகளாகக்கொண்டுவந்ததாகும்.

வானொலியும் தொலைக்காட்சியும் அரசுக்குச் சொந்த மான ஒரு வலுவான பிரச்சார சாதனமாகும். இதை இ. காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது தங்களுடைய சொந்தக் கட்சி அமைப்பின் பிரச்சார சாதனமாகப்பயன் படுத்தியது. அதை ஒரு சுயேச்சையான அமைப்பாக பிரச்சார பாரதி அமைப்பைக் கொண்டு வந்தது.ஒரு ஜனநாயக நடவடிக்கை யாகும். இதை வி. பி.சிங் தலைமையில்ான தேசிய முன்னணி அரசு வாக்குறுதியை நிறைவேற்றி அமுலுக்குக் கொண்டு வந்தது.

ஆறாவதாக தேசீய ஒருமைப்பாட்டுக் குழுவை மீண்டும் கூட்டி தேசீய ஒற்றுமை மதச்சார்பின்மை ஆகிய கொள்கை களை வலியுறுத்தி அதில் கருத்தொற்றுமையைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்ததாகும். தேசீய ஒற்றுமை, ஒரு மைப்பாடு, மதச்சார் பின் மை என்பது நமது நாட்டின் அடிப் படை தேசீயக் கொள்கையாகும் அதை உறுதியாக நிலை நாட்டுவது நமது அடிப்படைக் கொள்கை வழியாகும்.

ஏழாவதாக வி. பி.சிங் அரசு, மண்டல் குழு அறிக்கையை செயல் படுத்துவதற்கு ஆணையிட்டது. அதன் மூலம் பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு வேலைகளில் 27 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு அரசுப் பணிகளிலும்,கல்வி நிலையங்களிலும் இதர துறைகளிலும் ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்பது பிற்படுத்தப்பட்ட மக்களது நீண்ட நாள் கோரிக்கையாகும்.

ஏற்கெனவே தாழ்த்தப்பட்ட மக்களுடைய கிளர்ச்சி, முயற்சி, டாக்டர் அம்பேத்கார் போன்ற சமூகச் சீர்திருத்த வாதிகளின் கடுமையான முயற்சி காரணமாக தாழ்த்தப் பட்ட மக்களுக்கும் மலை வாழ் பழங்குடி மக்களுக்கும் -49? அலுவலகங்களில் கல்வி நிலையங்களில், சட்ட மன்றங்கள் பாராளு மன்றங்களில் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் அங்கமாக இடம் பெற்றிருக்கிறது.