பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 207

அரசுப்பணிகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தமிழ் நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், பீகார் முதலிய மாநிலங்களிலும் இட ஒதுக்கீடு உள்ளது.

மத்திய அரசிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் அது 27 சதவீதமாக இருக் கலாம் என்பது மண்டல் கமிஷன் பரிந்துரையாகும்.

பிற்படுத்தப்பட்டவர்கள் என்பது சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதாகும். இதில் பொருளாதார நிலைக்கு இடமில்லை. பொருளாதார நிலையில் அவ்வப்போது நிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே அதைப் பின்தங்கிய நிலைக்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ள முடியாது.

சமுதாய ரீதியிலும் : கல்வி ரீதியிலும் பின்தங்கிய நிலை ஒதுக்கப்பட்ட நிலை என்பது நமது காட்டில் இருக்கும் சாதிய அமைப்புகளினால் ஏற்பட்ட தீய விளைவுகளில் ஒன்றாகும். இந்த ஏற்றத் தாழ்வுநிலை பாகுபாடு, இன்றைய நிலையில் எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டு மல்ல, அனுமதிக்க முடியாததுமாகும். இது ஒரு சமூக நீதிபற்றிய பிரச்சனையாகும் .

சமுதாய சமத்துவம், சமூகநீதி என்பது நமது நாட்டில் சாதி அமைப்புகளும், சாதீய ஏற்றத் தாழ்வுகளும் பாகு பாடுகளும் ஏற்பட்ட நாட்களிலிருந்தே எழுப்பப்பட்ட பிரச்சனையாகும். ஏற்றத் தாழ்வுகளும் பாகுபாடுகளும் ஏற்பட்ட நாட்களிவிருந்தே அதற்கு எதிரான கிளர்ச்சி களும்_நமது நாட்டில் தொடர்ச்சியான வரலாறாக இருந் திருக்கிறது.

வேதங்களில் சாதிகளைப் பற்றிய குறிப்புகள் இல்லை. பின்னால் வந்த உபநிடதங்கள், மனு ஸ்மிருதிகளில் சாதி அமைப்பு முறைகளும் சட்டதிட்டங்களும் வகுக்கப்பட்டன. அப்போது வேறுபாடுகள் பாகு பாடுகள் உண்டாக்கப் பட்டன. வர்ணாசிரம தர்மத்தின்படி நான்கு வருணங்கள், நான்குவகை சாதிப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன.

பிராமணர், கூத்திரியர், வைசியர், சூத்திரர் என்று. மனித சாதி பிரிக்கப்பட்டது. இந்த நான்கிலும் சேர்க்கப் படாமல், ஒதுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டவர்களாக பஞ்ச மாகள கருதபபடடாாகள.

உபநிடதம் முதலிய நூல்கள், பிராமணர்களே உயர்ந் தவர்கள் என்றும் , அவர்களுக்கே போட்சத்தில் இடம் உண்டு என்றும் அதிலும் பிராமன. ஆண்களுக்கே மோட்சத்தில் இடம் உண்டு என்றும் பிராமணப் பெண்