பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 209

இரா மன் உடனே அந்த வல்லமை மிக்க விஷ்ணு தனுசைத் தனது கையில் வாங்கி யாராலும் வளைக்க முடியாத அந்த வில்லை வளைத்து நாண் ஏற்றி விட்டான்.

தொடுத்து விட்ட நானுக்கு இலக்கு வேண்டும். தனியே விட்டு விட முடியாது. அம்பைத் தொடுத்து ராமன். பரசு ராமனிடம் கூறுகிறான்: ‘பூதலம் முழுவதிலும் உள்ள அரசர்களையெல்லாம் வென்று அடக்கி விட்டாய். இப்போது என் முன்னால் என் அன்புக்கு முன்னால் நிற்கிறாய் . . உன்னை நான் அடக்கவேண்டும். என்றாலும் வேதத்தைப் பயின்ற வல்லமை மிக்க பிராமணனின் மைந்தன். எனவே உன்னைக் கொல்லக் கூடாது.ஆயினும் எனது அம்பிற்கு இலக்கு வேண்டும், அதைக் காட்டு’ என்று இராமன் கேட்கிறான். இராமனுடைய வெற்றியும் பரசு ராமனின் தோல்வியும் நிச்சயமாகி விட்டது. எனவே பரசு ராமன் பணிந்து “உனது அம்புக்கு, எனது தவ வலிமையை இலக்காக்குகிறேன் என்று கூற, இராமனுடைய க ைன பரசு ராமனுடைய வல்லமையை எடுத்துக் கொண்டு போய் விடுகிறது. என்று கூறி தனது விஷ்ணு தனுசு என்னும் வலிய வில்லை நீட்டுகிறான்.இராமன் அந்த வில்லை வாங்கி,

‘'பூதலத்தரசை எல்லாம் பொன்று வித்தனை என்றாலும் வேதவித்தாய மேலோன் மைந்தன் நீ! விரதம் பூண்டாய் ஆதலின் கொல்லல் ஆகாது அம்பிது பிழைப்பது என்றால் யாது இதற்கு இலக்கம் ஆவது? என்று கேட்கிறான்.

எய்த அம்பு இடை பழுது எய்திடாமல் என் செய்தவம் யாவையும் சிதைக்கவே எனக் கை அவன் நெகிழ்ந்தனன் கனையும் சென்று அவன் மையறு தவம் எலாம் வாரி மிண்டதே

இவ்வாறு இராமன் எய்த கணை பரசுராமனின் தவவலிமை அனைத்தையும் வாரிக் கொண்டு சென்றது. என்று கம்பன் கூறுவதைக் காணலாம். தனது வலுவை இழந்த பரசு ராமன் என்னும் பிராமணன்,

எண்ணிய பொருளெலாம் இனிது முற்றுக மண்ணிய மணி நிற வண்ண வண் துழாய்க் கண்ணிய யாவர்க்கும் களை கண் ஆகிய புண்ணிய விடை’ எனத் தொழுது போயினாள்.

தனது சக்தியனைத்தையும் கொடுத்து விட்டு இராமனை வணங்கி விடை பெற்றுக்கொண்டு போய் விட்டான் என்று

கதை கூறுகிறது.

இனி, விஸ்வாமித்திரன் என்னும் கூடித்திரியன் கடும் தவம் செய்து பஞ்சபூதங்களை வென்று அத்தனை வல்லமை மிக்க சக்திகளையும் பெற்று பிராமணர்களையெல்லாம் வென்று