பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 0 0 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

கடைசியில் வசிஷ்டன் என்னும் பிராமணத் தலைவனையும் சந்தித்தான். வசிஷ்டன் விஸ்வாமித்திரனின் வல்லமையை ஏற்று அங்கீகரித்து, வாராய் பிரம்ம ரிஷியே என்று கட்டி அனைத்து சமமாக ஏற்றுக் கொண்டான் என மற்றொரு கதை கூறுகிறது.

பின்னர் ஏற்பட்ட வரலாற்று நிகழ்ச்சி. கூடித்திரிய குலத்தில் பிறந்த கெளதம புத்தர், மகாவீரர் ஆகியோர், வேத விளக்கங்களை, சாதிச் சம்பிரதாயங்களை வருணாசிரம தர்மத்தை நிராகரித்து அனைவரும் ஒன்று என்று அறிவித்து சங்கம் அமைத்து சமபந்தி சாப்பாடுகளை நடத்தி மடங் களை அமைத்து பெரிய நாடு தழுவிய இயக்கங்களையே நடத்தினர். அவையே. புத்தம் என்றும் சமனம் என்றும் பெரும் சமயங்களாக ஏற்பட்டு அவற்றில் பெரு வாரியான மக்கள் திரண் டனர்.

புத்தம், சமனம் போன்ற சமயக் கருத்துக்களுக்கு , 5 மது நாட்டின் தன வணிகர்கள், வைசியர்கள் பேராதரவு கொடுத்ததாகப் பல கதைகள் மூலம் தெரியவருகிறது.

தமிழில் ஐம்பெரும் சாப்பியக் கதைகளிலிருந்தும் பல செய்திகள் கிடைக்கின்றன.

சிலப்பதிகாரக் கதையில், சோழனுடைய அரசசபையில் பல பெருநில , குறுநில, சிறுநில, மன்னர்களும் பெறமுடியாத மாலையை தன வணிகன் கோவலன் வாங்கி மாதவியைப் பெறுகிறான் மதுரையில் பாண்டியனுடைய அரசசபையில் கோப்பெருந்தேவியின் சிலம்புக்கு ஈடாக தனது சிலம்பை ஆதாரம் காட்டி, கோவலனைக் கள்வன் இல்லை என்று நிரூபித்து, அரசியல் பிழைத்தோருக்கு அறத்தைக் கூற் றாக்கி ஒரு தனவணிகமாது, மன்னனை வீழ்த்தி, மதுரை யைத் திக்கிரையாக்கி வானவிதி வழியாக மோட்சத்தை அடைந்ததாகக்கதை கூறுகிறது.

f

சீவக சிந்தாமணியின் சீவகன் அரசனுக்கு மகனாகப் பிறந்து, வணிகன் வீட்டில் வளர்ந்து, வித்தியாதரப் பெண் மற்றும் அரசகுலப்பெண்கள், வைசிய குலப்பெண்கள் எட்டுப்பேரை மனந்து அரசகுலத்தையும் வைசிய குலத்தையும் சம அந் தஸ்து கொடுத்து, வணிக வைசிய குலத்தையும் அரச குலத் திற்கு சமமாகக் கொண்டு வருகிறான்.

இந்தக் கதைகள் எல்லாம் அன்றய சமுதாயப் பின்னல்களை வெளிப்படுத்துகிறது என்பதில் சந்தேகம் இல்லை. இவை யெல்லாம் தாழ்த்தப்பட்ட குலங்களை உயர்த்துவதற்குள்ள போராட்டங்களின் வெளிப்பாடுகளாகும்.

தனவணிகனும் கணிகைக்கும் பிறந்த மணிமேகலை பெரிய தத்துவ ஞானியாகப் புகழ் பெற்று, சமயக்கணக்கர்களை