பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 217

ஒதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்று கூறிய மூதாட்டி பிறந்த இந்த புண் ணிய பூமியில் தான் இன்னும் கல்வி அறிவில்லாத மக்கள் அறுபது சதவீதத்திற்கும் மேல் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறங் களில் இருக்கிறார்கள்.

தத்துவ ஞானத்தில் தலைசிறந்த பாரத நாட்டில் மூட தம்பிக்கைகளும் நிறைந்து விளங்குகின்றன.

நம்முடைய சிந்தனையில் கிராமப்புறமக்கள் முதலிடம் பெற வேண்டும். அவர்களுடைய உழைப்பிற்கு முதலிடம் கிடைக்கவேண்டும்.

கிராமப்புற மக்களை நாம், ஏழைகளாய், பஞ்சைகளாய், பராரிகளாய் . பரிதாபத்திற்குரிய வர்களாய், தட்டு ஏந்தி. மதிய உணவு கேட்பவர்களாய், சிப்பாய்களைக்கண்டு அஞ்சு பவர்களாய், ஊர்க்காவலர்களைக்கண்டு கைகட்டி நிற்பவர் களாய், முழத் துண்டு இல்லாதவர்களாப் , ஒட்டிய வயிறும், கூன் விழுந்த முதுகும், குழிவிழுந்த கண்களையும் கொண்ட வாகனாாபதி கா ன சிசு டாது .

கடும் உழைப்பாளர்களாய், எண்ணற்ற வயல் வெளிகளை யும் ஆலைகளையும் தொழிற்சாலைகளையும் உண்டாக்கிய வர்களாய், உயர்ந்த கோபுரங்களையும் ஆழமான அணை களையும் ஏரிகளையும் குளங்களை யு. கட்டி யவர்களாய், மண்ணைப்பிசைந்து மாளிகைகள் கட்டுபவர்களாய், உலகில் பசியைப் போக்குபவர்களாய், மாந்தரின் மானத்தைக்காப் பவர்களாய், அறிவுச்சுடரை ஏற்றுபவர்களா ய், வீரம் மிக்க வர்களாய், உள்ளத்தில் உறுதிகொண்டவர்களாய் அளப் பறிய பொது அறிவு கொண்டவர்களாய், தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் புரட்சிக்குத் தயாராகிக் கொண்டிருக் கும் மகத்தான சமுதாயப் புரடசியின் போர் வீரர்களாய் நமது கிராமப்புற மக்களைக்கான வேண்டும்.

காட்டு விலங்குகளை எதிர்த்துப் போராடி வெற்றி கண்ட கிராமப்புற மக்களை நாட்டு விலங்குகளான சு எண்டும் கூட் டத்தை எதிர்த்துப் போராட வழிகாட்ட வேண்டும்.

வயல்களில் விளை நிலங்களில் பயிரோடு வளர்ந்த களை களைக் களைந்து பழக்கப்பட்ட, கிராமப்புறபாட்டாளி மக்கள் சமுதாய முன்னேற்றத்திற்குக் குறுக்கே உள்ள களை களை நீக்குவதற்கு உதவ வழி காட்ட வேண்டும்.

பாரத நாடு தனது நீண்ட பயணத்தில் எத்தனையோ கொடுங்கோல் அரக்கர்களைக் கொன்று மாய்த்து மக்க ளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறது. எத்தனையோ