பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 0 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

காசில் தார்கா, ரெவின்யூ இன்ஸ்பெக்டர்கள் , கிராம முன் சீபு கர்ணம் வரை யிலும், மற்றும் போலீஸ் அதிகாரிகள், நீதி மன்றங்கள் முதலிய எல்லாரும் விவசாயிகளை

யும் கிராமப்புறப் பாட்டாளி வர்க்கத்தையும் அடக்கி ஒடுக்கும் வன்முறைக் கருவியாகவே, மக்க ள அழுத்தி வதைக்கும் கொடுமைக்கருவியாகவே இருந்தார்கள். தங்களைக் கொடுமைப்படுத் தும் இந்த அரச ங்க வன் முறைக்கருவிக்கும் ஆகும் செலவை யெல்லாம் விவசாயிகள் தான் சுமக்க வேண்டியிருந்தது.

மறுபக்கம் மத்திய காலத்தில் சில மன்னர்கள் செய்த சில நல்ல காரியங்களை பொதுப்பணித்துறைப் பணிகளைக் கூட ஆங்கில அரசு சரியாகச் செய்ய வில்லை.

நீர்ப்பாசனத்திற்கு இரண்டொரு அணைகள் கட்டப் பட்டன. மராமத்து இலாக மூலம் சில ஏரிகள் எப்போதா வது மராமத்து செய்யப்பட்டன. விவசாயிகளுக்கு வேண்டிய இதர வசதிகள் எதுவும் அரசாங்கம் செய்யவில்லை. கல்வி யும்- பெரும்பாலும் ஆங்கிலக்கல்வி-தனியார் கையிலும் கிறிஸ்தவ மதஸ்தாபனங்கள் கையிலும் இருந்தன.

இவ்வாறாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய விவசாயம், விவசாயத் தொழில், சுகேசி மன்னர்களின் சுரண்டல் முறையால்-ஜமீன்தாரர்கள், நிலச்சுவான்தார் களின் நிலப்பிரபுத்துவ சுரண்டல் முறைகளால்

அந்நிய ஆட்சியின் வரிக்கொடுமையால்

லேவா தேவிக்காரர்களின் வட்டிக் கொடுமையால்

அந்நிய ஏகாதிபத்திய மார்க்கட்டின் விலைக் கொடுமை ) —

அந்நிய அரசாங்கத்தின் வன்முறைக் கொடுமையால் வீழ்ச்சியடைந்தது. இந்திய விவசாயிகள் ஏழ்மையிலும் வறுமையிலும் தள்ளப்பட்டார்கள்.

பிரிட்டிஷ் வியாபாரக் கம்பெனியைச் சேர்ந்த ஒரு ஆங்கிலேயர் . ‘நாம் இந்திய நாட்டைச் சுரண்டிக் கொள்ளை யடித்ததைப் போல் ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டைச் செய்திருந்தோமானால் அந்த நாடு அழிந்திருக் கும். ஆனால் இந்திய நாட்டில் ஆண்டு முழுவதிலும் சூரியனின் ஒளி பிரகாசிக்கிறது. வற்றாத ஆறுகள் உள்ளன ஒரு மழை பெய்தவுடன் அந்த மண் தனது செழிப்பைக் காட்டி வளம் கொழிக்கிறது’ எனக்குறிப்பிட்டுள்ளார். எனவே ஆங்கிலேயர்களின் கொடுமையான ஆட்சியாலும் இந்திய வை, இந்திய விவசாயிகளை அழிக்க முடியவில்லை.