பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் - 7

வேலூர் உபயதுல்லா, டாக்டர் சுப்பராயன், ஈரோடு ராமசாமி நாயக்கர், அவினாசிலிங்கம் செட்டியார், சி. சுப்ரமணியம், முத்துராமலிங்கத் தேவர், பி.எஸ். குமார ச மி ராஜா, காமராஜர், எஸ். ராமசாமி நாயுடு, ரா. கிருஷ்ணசாமி நாயுடு, பக்தவச்சலம், வி. முனுசாமி பிள்ளை, கோபால் ரெட்டி, நீலம் சஞ்சீவி ரெட்டி பேராசிரியர் ரெங்கா, மாதவ மேனன் முதலிய சிறந்த தேச பக்தர்களும் முக்கிய இடம் பெற்றிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலோர், மேல்தட்டில் இருந்த விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்தக்காலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. மீரத் சதிவழக்கு முதலிய சதி வழக்குகளில் கொடுமையாக தண்டிக்கப்பட்டு சிறைவாசம் முடித்து வெளியே வந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள், இந்திய

தேசிய காங்கிரஸ் கட்சியில் இடதுசாரிகளாகவும் சோஷலிசக் கருத்துக்களையும் கொண்டிருந்த ஜெயப் பிரகாஷ் நாராயணன், அச்சுதபட்டவர்த்தனன், அசோக்

மேத்தா முதலியவர்களுடன் சேர்ந்து 1934 ஆம் ஆண்டில் காங்கிரஸ் மக சபைக்குள்ளேயே காங்கிரஸ் சோஷலிஷ்ட் கட்சி என்னும் அமைப்பை உண்டாக்கி, தீவிரமான காங் கிரஸ் காரர்களாகவும், தொழிலாளர் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்துபவர்களாகவும், சோஷலிசக் கருத்துக்களை பரப்புபவர்களாகவும் பணியாற்றினார்கள்.

காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இருந்த முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களில் டாக்டர் இஜட். ஏ. அகமது, பங்கிம் முக்கர்ஜி, ஏ.கே. கோபாலன், இ, எம்.எஸ். நம் பூதிரிபாத், பி. சுந்தரய்யா, சோகன் சிங் ஜோஷ் பவானி சென் பி. சீனிவாசராவ் பாப்பாங்குளம் சொக்கலிங்கம் பிள்ளை முதலியோர்அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள்பொதுச்செயலாளர்கள்பொறுப்பில்பணியாற்றி யவர்களாவர். இவர்களுடன் சகஜானந்த சரஸ்வதி, பேரா சிரியர் என் ஜி. ரங்கா இந்துலால் யக்னிக். முதலிய காங்கிரஸ், சோசலிஸ்ட் தலைவர்களும் அகில இந்திய விவசாயிகள் சங் கத்தில் முக்கிய தலைவர்களாகப் பணியாற்றியுள்ளார்கள்.

காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி சென்னை மாகாணத்தில் ஒரு வலுவான அமைப்பாக இருந்து காங்கிரஸ் கட்சிக்கு உள்ளே யும் வெளியேயும் பணியாற்றினார்கள். ப. ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி சீனிவாசராவ், பி. சுந்தரய்யா, சி. ராஜேஸ்வரராவ், சி. எஸ். சுப்ரமணியம், இ.எம்.எஸ் நம் பூதிரிபாத், ஏ.கே. கோபாலன் முதலிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் சென்னை மாகாணத்தில் இருந்த காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி அமைப்புகளின் முக்கிய தலைவர்களாக வும், காங்கிரஸ் கட்சிக்குள் முக்கிய பிரச்சாரகர்களாகவும் இருந்தார்கள்.