பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.8 C கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி..

இனி, வாரம் குத்தகைதார் பாதுகாப்புச் சட்டம், நியாய வாரச் சட்டம், நில உச்ச வரம்புச் சட்டம் முதலிய சட்டங் கள் மூலமும் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் முழுமையாக இல்லாவிட்டாலும் முக்கியமானவைகளாகும்.

கேரளாவிலும், மேற்கு வங்காளத்தில் பெரும் பகுதியிலும் நிலப்பிரபுத்துவம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது. இதர மாநிலங்களில் சட்டங்களில் உள்ள ஒட்டைகக்ால் முழுமையான பலன் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. நில உச்ச வரம்புச் சட்டத்திலிருந்து தப்பி ஏராளமான பினாமிகள் மூலம் நிலச்சுவான்தார்கள் தொடருகிறார்கள். ஆனால் அதே சமயத்தில் இந்த சட்டங்கள் காரணமாகக் கிராமப்புறப் பாட்டாளிகளிடத்தில் ஒரு விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கிறது. வலுவான விவசாய சங்க்ங்கள் உள்ள இடங்களில் குறிப்பிட்ட அளவில் சட்டங்கள் நிறைவேற்ற முடிந்திருக்கிறது.

தமிழகம் மற்றும் இதர சில மாநிலங்களில் கோவில்கள் மடங்கள் பேரிலும் ஏராளமான நிலம் இருக்கிறது. அவை யெல்லாம் உச்ச வரம்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப் படவில்லை.

நிலச்சட்டங்களில் பல ஒட்டைகள் இருப்பினும் பொதுவான விழிப்புணர்வு காரணமாகவும் இதர் சமுதாய மாற்றங்கள் காரணமாகவும் இயல்பான முறையிலும் நில உறவு முறை யில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஏராளமான சிறிய நடுத்தர நிலச்சுவான்தாரர்கள் பலர் தங்கள் நிலங்களை விற்று விட்டு நகரப்புறங்களுக்கு வந்து விட்டனர். அல்லது வேறு தொழில்களுக்குச் சென்று விட்ட் னர். அதனால் நிலச்சட்டங்களுடன் சேர்ந்து இயற்கையான மாற்றங்களும் கிராமப்புற நிலஉடமை முறையிலும் கிராமப் புறப்பாட்டாளிகளின் வாழ்க்கைநிலையிலும் உணர்வுநிலையி அலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. ,

1947-ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 15-ஆம்தேதி நாடுவிடுதலை யடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் 1948-ம்ஆண்டில் ஆமீன் ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. சுதேசி சமஸ்தானங்கள் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டன. அதன் பின்னர் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது.

1980 ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசியல் சட்டம் அமு லாக்கப்பட்டு இந்தியா குடியர்சு எனப் பிரகடனம் செய்யப் பட்டது.