பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 69

இந்திய அரசியல் சட்டப்படி இந்திய மக்களுக்குப் புதிய அரசியல் உரிமைகள் கிடைத்தன. தொட்டால்ே திட்டு, பார்த்தாலே பாவம் என்று இருந்த பாரத சமுதாய்த்தில் 21-வயது வந்து விட்டால் _(இப்போது 18 வயது) ஆண் பெண் வேறுபாடு இன்றி, சாதி மத மொழி வேறுப்ாடு இன்றி அனைவருக்கும் ஒட்டுரிமை, அனைவரும் சமம் என்று பிரகடனம் செய்யப்பட்டது.

1952-ஆம் ஆண்டில் வயது வந்தோர் அனைவருக்கும் ஒட்டுரிமை அடிப்படையில் மாநில சட்ட மன்றங்களுக்ரும் மத்திய பாராளு மன்றத்திற்கும் பொதுத் தேர்தல் நன்ட பெற்றது.இந்தத் தேர்தல் காலத்தில் நாட்டு மக்களிடத்தில், குறிப்பாக கிராமப்புற பாட்டாளிகள் மக்களிடத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் எழுச்சி ஏற்பட்டது.

முதலாவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர், அரசியல் சட்டம் செயல்பட்ட பின்னர், படிப்படியாக சுதேச சமஸ் தானப் பகுதிகள் முழுமையாக இணைந்து, மொழி வழி மாநில அமைப்புகள் ஏற்பட்டன. அதை ஒட்டி சாதாரன் மக்கள் தங்கள் சொந்தமொழியில் அரசியல் விவகாரங்களில் பங்கு கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டன.

இத்தகைய புதிய வளர்ச்சி கிராமப்புறப் பாட்டாளி மக்களின் அரசியல் பொருளாதார சமுதாய வாழ்க்கை நிலைமை களில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின.

இந்த மாற்றங்களை ஒட்டி, கிராமப்புற நிர்வாகத்திலும் நில உற்பத்தி முறையிலும் புதியமேம்பாடுகள் கொண்டு வரவும் விவசாய உற்பத்தியில் புதிய ஏற்றம் கொண்டு வருவதற்கும் நவீன உற்பத்தி முறைகளைக் கொண்டு வருவதற்கும் கள்ம் அமைக்கப்பட்டது.

கிராம நிர்வாகம், பஞ்சாயத்து, பள்ளிக்கூடம், கூட்டுறவு நாணய சங்கம், பஞ்சாயத்து யூனியன், வட்டார வளர்ச்சி நிறுவனங்கள் முதலியன ஏற்பட்டன.

புதிய அணைக்கட்டுகள், கிராமங்களுக்கு மின்சாரம், பம்பு செட்டுகள், ரசாயன உரம், பூச்சி மருந்துகள், நவீன விவசாய ஆராய்ச்சிப் பண்ணைகள், நவீன வீரிய வித்துகள் முதலிய புதிய நவீன உற்பத்திமுறைகள் செயலுக்கு வந்தன. இவைகளைப் பசுமைப்புரட்சி என அழைத்தார்கள். ஆனால் இவையெல்லாம் முதலாளித்துவ வழி முறையிலே தான் செயல்படுத்தப்பட்டுள்ள . அதன் விவரங்களை அடுத்துக் காண்போம்.

  • r