பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 75

முதலாளித்துவ உற்பத்தி உறவுகளே வளர்ச்சி பெற்று கி. மப்புறங்களிலும் ஆதிக்கம் கொண்ட உற்பத்தி உறவு களாக வளர்ச்சி பெற்று வந்துள்ளது

கிராமப்புறங்களில், விவசாயத்துறையில் முதலாளித்துவ வளர்ச்சி என்ற ல் என்ன?

முதலாளித்துவ உற்பத்தி முறையின்அடிப்படை 1)முதலீட்டு ஏற்பாடு, 2)நவீன உற்பத்திக் கருவிகள், 3)கூலி உழைப்பு, 4) மார்க்கட்டிற்காக அதாவது விற்பனைக்காக உற்பத்தி ஆகியவைகளைக் கொண்டதாகும்.

இந்த நான்கு மு தலாளித்துவ அடிப்படைகளும் இன்றைய நமது இந்திய விவசாயத்துறையில் வலுவாக வளர்ந் துள்ளது.மேலும் வலுவாகி இறுகலாகிக் கொண்டிருக்கிறது.

முதலாவதாக முதலீட்டு ஏற்பாடுகள் என்பது. உற்பத்தி சாதனமாகிய நிலம் அதன் விலை, அதற்காக முதலீடு செய்து நிலத்தை வாங்கி, முதலீட்டுக் கணக்கில் வைப்பது, நீர்ப் பாசன ஏற்பாடான கிணறு பம்பு செட்டு ஆகியவைகளுக் கான முதலீடு, அணைகள் நீர்த் தேக்கங்கள் என்றாலும் அவைகளைக் கட்டுவதற்கான முதலீடு, கிணறு, பம்புசெட்டு

அணைகள் கால்வாய்கள் முதலியவற்றைப் பராமரிப்பதற் கான செலவு, உற்பத்திக்கருவிகளான டிராக்டர், புல் டோசர், ஸ்பிரேயர்கள், லாரிகள் டெம்போக்கள்

முதலிய உற்பத்திக் கருவிகளுக்கான முதலீடு, அல்லது வாடகைச் செலவுகளுக்கான முதலீட்டு ஏற்பாடுகள், விதைகளுக்கு, உரத்திற்கு, பூச்சி மருந்திற்கு முதலிய முட்டுவளிச் செலவுகளுக்கு வேண்டிய மூலதன முதலீடு ஏற்பாடுகள்-இவ்வாறாக நிலையான மூலதனம் நடப்பு மூலதனம் ஆகியவை விவசாயத் தொழிலுக்கு அடிப் படையாக அமைந்துள்ளன. இது பெரிய அளவு பண்ணை களாக இல்லாமல் சிறிய அளவில் சிறு சிறு பண்ணைகளாக இன்றைய நிலையில் நமது நாட்டில் அமைந்துள்ளன. இந்தப் பண்ணைகளின் பரப்பளவிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின் றன. அதைப் பின்னர் காண்போம்.

இரண்டாவதாக, நவீன உற்பத்திக்க கருவிகள் என்பவை பாவலாக வரத் தொடங்கியுள்ளன.

நவீன உற்பத்திக் கருவிகளில் உழவடை எந்திரங்கள் டிராக் டர்கள், புல்டோசர்கள், தொளி கலக்கும் கருவிகள், முதலியவை, களையெடுக்கும் கருவிகள், ரசாயன உரம், பூச்சி மருந்துகள், மருந்து அடிக்கும் கருவிகள், அறுவடைக் கருவிகள், தண்ணிர் இறைக்கும் கருவிகள், மின்சாரம் முதலியன அதிகரித்துக் கொண்டுவருகின்றன. கிராமப்புற