பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 7 7

உற்பத்தி என்பது குடும்பத்தின் அல்லது கிராமத்தின் அல்லது குறிப்பிட்ட் சமுதாயத்தின் தேவைக்காக என்று தான் செய்யப்பட்டது. நல்ல பருவ நிலை அல்லது வேறு சாதகமான சூழ்நிலை காரணமாக சாகுபடி சிறப்பாக அமைந்து உபரி அதிகமாக வந்தால் அந்த உபரியை சந்தைக்கு அனுப்புவது என்பது பழக்கமாகும். அதை இயற் கைச்சந்தை என்று கூறுகிறோம். அந்தப் பழை ய இயற்கைச் சந்தை முறை மாறிவிட்டது. இப்போது உணவு தானியங்கள் உள்பட விவசாய உற்பத்தி முழுவதுமே மார்க்கட்டிற்காக என்று ஏற்பட்டுவிட்டது.

இன்றைய இந்தியாவின் மார்க்கட் என்பது இந்திய முதலா ளித்துவ மார்க்கட்டாகும். இந்திய முதலாளித்துவ மார்க்கட் உலக முதலாளித்துவ மார்க்கட்டுடன் பிணைக்கப்பட்டு அதைச் சார்ந்திருக்கிறது. முதலாளித்துவ மார்க்கட்டில் மிகவும் முக்கியமான அம்சம் விலை ஆகும்.

இன்றைய விவசாய உற்பத்தியும் விநியோகமும், -அதாவது இன்றைய இந்தியாவின் விவசாயப் பொருளாதாரம் முழு வதுமே-முதலாளித்துவ மார்க்கட்டையே சார்ந்திருக் கிறது. முதலாளித்துவ மார்க்கட்டின் விலை முறை தான் இன்றையஇந்திய விவசாய உற்பத்தி முறையின் வளர்ச்சிக் கும், நிலைபாட்டிற்கும் நெருக்கடிக்கும் ஆதாரமாக அமைந் துள்ளது.

விவசாயிகள், தங்களுடைய விவசாய உற்பத்திக்காக வாங்கும் பொருள்கள், கருவிகள், இடு பொருள்களின் விலை யும், உற்பத்தி செய்யும் பொருள்களின் விலையும் அவர்களின் உற்பத்திச் செலவையும், வருவாய் அளவையும் தீர்மானிக்கிறது.

விவசாயிகள் தங்கள் சொந்த உபயோகத்திற்காக மார்க்

கட்டில் கடைகளில் வாங்கும் பொருள்களின் விலை உயர்ந்து கொண்டேயிருக்கிறது. அதனால் விவசாயிகளின் கிராமப்புற மக்களின் வாழ்க்கைச் செலவுகள் உயர்ந்து

கொண்டே போகிறது. ஆனால் இந்த நிலை எல்லாப் பகுதி மக்களுக்கும் பொதுவானது. இது பற்றி நாம் தனியாகத் தான் பேச வேண்டும்.

விவசாயிகள் விவசாய உற்பத்திக்காகப் பயன்படுத்தும் பொருள்கள்,இடுபொருள்களின் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. விவசாயக் கருவிகளின் விலை உயர்ந்து கொண்

டேயிருக்கிறது. பம்புசெட்டுகள், அதன் உபகருவிகள், மின்சாரச்செலவு, டிராக்டர், டெம்போ, ஸ்பிரேயர் முதலியவற்றின் விலை, டயர், ஸ்பேர் சாமான்கள்

எண்ணெய், ஆகியவற்றின் விலை, உரம் பூச்சிமருந்து முதலிய