பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 83

இப்போது ஒவ்வொரு தானியம், நவதானியம், பழம் காய் வகையிலும் புதியன உண்டாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதே சமயத்தில் பயைய இனங்கள் ரகங்கள் முற்றிலும் அழிந்து கொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான தாவர உயிரின வகை அழிவது அபாயகரமானதாகும். அது நாளா வட்டத்தில் நிலத்தின் சமநிலையையும் கெடுத்து விடும். அது இயற்கைச் சூழல் சம நிலையைக் கெடுத்து விடும். அந்த அபாயம் நமது பசுமைப்புரட்சி விவசாயத்தில் ஏற்பட்டிருக்கிறது.

எனவே பசுமைப் புரட்சியின் பலன்கள் விவசாயிகளுக்குக் கிடைக்க வில்லை. இப்போது ஏற்பட்டுவரும் அதன் பாதக விளைவுகளைத் தடுக்க முடியவில்லை. இது விவசாய உற் பத்திக்கே ஒரு அபாயத்தை உண்டாக்கியிருக்கிறது. இந்த அபாயத்தைத் தடுக்க புதிய முயற்சிகள் தேவை. அது அரசு மட்டத்தில் மட்டுமல்ல சமுதாய மட்டத்திலும் தேவை.

இந்தப்பிரச்னைகள் மீது எல்லா தரப்பிலும் கிராமப் புறப் பாட்டாளிகளின் உணர்வு நிலையை உயர்த்த வேண்டும். இது பற்றி கிராமப்புறப் பாட்டாளி மக்களின் ஒன்றுபட்ட இயக்கமும் வளர வேண்டும். விவசாயத் துறையில் ஏற் பட்டுள்ள நெருக்கடிகளைப்பற்றி அடுத்த அத்தியாயங்களில் விரிவாகக் காண்போம்.