பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 9 1

அழிந்து கொண்டிருக்கின்றன. இந்த இயற்கைச் சூழல் நெருக்கடியை சமாளிப்பதற்கு முதலாளித்துவ முறையில் எந்தச் சரியான திட்டமும் இல்லை.

இந்த இயற்கைச் சூழல் நெருக்கடியினால் இந்தியா மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் காடுகள் ம ~லகள், ஆறுகள், கடல் எல்லாம் பாதிக்கப்பட்டிருக் கின்றன. இந்தியாவின் தாவர இனங்கள் விலங்கினம், பறவை இனங்களுக்கு அழிவு அபாயம் ஏற்பட்டிருக்கிறது. சுற்றுப்புறச் சூழல்களைப் பாதுகாப்பதற்கு சில நட வடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் பாதிப்புகள் தொடருகின்றன.

இவையெல்லாம் இயற்கைச் செல்வங்களை முறையாகப் பாதுகாத்துப் பயன்படுத்தும் முறையில் உள்ள தவறுகள் காரணமாகத்தான் ஏற்படுகின்றன என்பதை நமது அனுப வங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

எட்டாவதாக, முதலாளித்துவ நாடுகளில், ஆளும் வர்க்கங் களிடமும், ஆட்சியாளர்களிடமும், பொது மக்கள் பகுதி களிலும் பொது அமைப்புகளிலும் ஏற்பட்டுள்ள ஒழுக்க நெருக்கடியாகும். லஞ்சம், ஊழல், மோசடி, பொய், ஏமாற்றுவித்தை, கள்ளத்தனம்,கருப்புப்பணம்,கடத்தல், கலப்படம் ,பொய்க்கணக்கு, வரிஏய்ப்பு, தரக்கேடுகள், நிர் வாகச் சீர்கேடுகள், சீரழிவுகள், கொள்ளை லாபம், சண்டைகள், கொள்ளை. கொலை, திருட்டுக்குற்றங்கள் அதிகரிப்பு முதலிய சமுதாயச் சீர்கேடுகள் அதிகரித்து விட்டன. இந்தக் குறைபாடுகள் ஏதோ சில சமுதாயப் பகுதிகளில் மட்டுமல்லாமல், சமுதாயத்தின் பெரும் பகுதியை முதலாளித்துவ அமைப்பு முறை உள்ள நாடு களில் சூழ்ந்திருக்கின்றன. குறிப்பாகமேல் மட்ட ஊழல்கள் அதிகரித்து வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி வாட்டர் கேட் ஊழல், ஜப்பான் பிரதமர் ஊழல், பிரிட்டிஷ் மந்திரியின் ஒழுக்கக் கேடுகள் இந்தியாவில் டில்லியில் ஏற்பட்டுள்ள உயர்மட்ட உளமுல், தமிழகத்தில் ஊழலை எதிர்த்து வந்த ஆட்சியில் ஏற் பட்டுள்ள பெரிய ஊழல் ஏற்பட்டுள்ளதைக் காண்கிறோம்.

தொழில் துறைகளில், கல்வி நிலையங்களில், ஆஸ்பத்திரி களில் அரசு நிர்வாகங்கள் அனைத்திலும், கூட்டுறவு அமைப்புகளில், சில தொழிலாளர் சங்கங்கள் நீதி மன்றங்கள் இவ்வாறு அனைத்திலும் லஞ்ச ஊழல்கள், சீர் கேடுகள், ஒழுக்க நெருக்கடி முற்றி வருவதைக் காண் கிறோம். இந்த ஒழுக்க நெருக்கடி இன்றைய உலக