பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி .

இந்திய விவசாயத்தில் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியின் தன்மையை விரிவாக ஆராய்ந்து நாம் சரியான ]] காண முயற்சிக்க வேண்டும்.

முதலாவது, சிறு விவசாயிகள். நடுத்தர விவசாயிகள் தங்கள் கையிலுள்ள சிறிதளவு நிலத்தை வைத்து கட்டு படியாகும் முறையில் சாகுபடி செப்ப முடியவில்லை. விவசாயச் செலவுக்கும், அந்த விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதனால் கடன் சுமை அதிகமாகி அதைத் தாங்க முடியாமல் தனது நிலத்தை விற்பனை

செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. உழுபவனுக்கே நிலம் என்னும் நிலை மாறி, உழுபவனிடமிருந்து நிலம் பறி போய்க் கொண்டிருக்கிறது. இந்த மாதிரி வரும்

நிலத்தை விவசாயமும் இதர தொழில் வர்த்தகம் செய்து வேறு வருமானமும் உள்ளவர்கள் சிறிதளவு, நகரங்களில் தொழில் நடத்தி அதில் வருமானமும் கருப்புப் பணமும் உள்ளவர்கள் சிலர் வாங்கி, முதலாளித்துவ முறையில் பண்ணைகளாக்கி வருகிறார்கள். இந்தப் போக்கு இப்போது நில உடமையில் வளர்ந்து கொண்டிருக்கிறது. இது புதிய பிரச்னைகளைக் கிளப்பும். இதன் மூலம் விவசாயத் தொழிலாளர் பிரச்னை புதிய முறையில் கிளம்பும். இரண்டாவதாக, நீர்ப்பாசனம் இப்போது நிச்சயமற்றதாகி வருகிறது. பருவ மழை தவறியதால் அணைகளில் தண்ணிர் இல்லை. தமிழகத்தில் ஏற்கனவே தமிழகத்தில் பாலாறு வறண்டு விட்டது. பெண்ணையாறு வறண்டு கொண்டு வருகிறது. தமிழகத்தில் இருப்பதில் பெரிய ஆறு காவிரியாறு. வான் பொய்க்கினும் தான் பொய்யாத பொன்னியாறு இன்று மேலே அணைகட்டி தண்ணிர் நின்று விட்டது. அதனால் பொன்னியும் வற்றி வறண்டு கொண்டிருக் கிறது. காவிரி நீர்ப்பிரச்னைக்குத் தீர்வு 5IT G பல ஆண்டுகள் கடந்தும், இன்னும் விடி வெள்ளி காணப்பட வில்லை. இருள் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

காவிரி நீர்ப் பிரச்னை பற்றி மாநில அரசு ஆரம்பத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவர்த்தைகள் நடத்தியது. அதில் அதிகாரிகளும் அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள். ஆனால் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தம் இன்னும் தொடர்ந்துசெல்லுபடி யாகும் என்பது தமிழக அரசின் நிலைபாடாகும். ஆனால் கர்நாடக அரசோ அந்த ஒப்பந்தம் காலாவதி யாகி விட்டது என்றும் கூறுகிறது. அதே சமயத்தில் கர்நாடக அரசு, தமிழ்நாடு அரசுக்குத் தகவல் இல்லா மல், விவாதிக்காமல், மத்திய அரசின் அனுமதியோ, திட்டக் கமிஷன் அனுமதியோ, மத்தியநதிநீர்க்கமிஷன் அனுமதியோ இல்லாமலும் ஏற்கெனவே உள்ள அணைகள் போக கபினி ஆற்றிலும் இதர இடங்களிலும் மேலும் அணைகளைக்