பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

ஏற்பட்டுள்ளதை உடனடியாகத் தடுக்கவேண்டும்.தவிர்க்க வேண்டும்.இயற்கையில் ஏற்படும் நெருக்கடிகளை எதிர்த்து மாற்று வழிகாண வேண்டும் இந்த நெருக்கடியை சமாளிக்க உடனடி நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அது பற்றி அடுத்த அத்தியாய்ங் களில் பார்க்கலாம்.

தமிழ் நாட்டில் பழைய காலம் தொட்டு இருந்து வரும் மிக முக்கியமான நீர்ப்பாசன முறை ஏரி குளம் கண்மாய்ப் பாசனமாகும். தமிழ் நாட்டில் ஒடும் எல்லா ஓடைகள் சிற்றாறுகள், காட்டாறுகள் ப்ெரிய ஆறுகள் நதிகள் அனைத்திலும் குறுக்கணைகள் கட்டப்பட்டு ஏரிகள் குளங் கள் கண்மாய்கள் குளங்கள் வெட்டப்பட்டு, அவைகளில் அந்தத்தண்ணிர்தேக்கப்பட்டு பாசனத்திற்குப்பயன்படுத்தப் பட்டு வருகிறது.இவ்வாறான பாசன ஏரிகள் தமிழ் நாட்டி அலும் ஆந்திரப் பிரதேசத்திலும் அதிகம் இருக்கின்ற்ன. வேறு எங்கும் இல்வளவு நெருக்கமாக ஏரிகள், குளங்கள், கண் மாய்கள் இல்லை. அநேகமாக தமிழ் நாட்டில் ஒடும் ஆறு களின் தண்ணிரில் 80 சதவீதத்திற்கு மேல் பயன் படுத்தப் படுகிறது என்று கூறலாம்.

தமிழ்நாட்டில் இவ்வாறான பாசன ஏரிகள் 50 ஆயிரத் திற்கு மேல் உள்ளன. இவை தவிர ஊர் தவறாமல், நாடு முழுவதிலும் லட்சக்கணக்கில் சிறிய நீர்நிலைகள் இருக்கின்றன. தமிழ் மொழியில் நீர்நிலைகளுக்கு LIGl) பெயர்கள் உள்ளன. ஏரி, குளம், கண்மாய், தெப்பம், தெப்பக்குளம், ஏந்தல், ஊருணி, பொய்கை, தடாகம் இவ்வாறு பல பெயர்கள் உள்ளன. இத்தனைப் பெயர் கள் நீர்நிலைகளுக்கு வேறு எந்த மொழியிலும் இருப்ப தாகத் தெரியவில்லை. கோவிலைக் கட்டி குளத்தை வெட்டுவது புண்ணியமென்று பழங்காலத்துப் பெரியோர் கள் கருதி வந்தனர். ஒவ்வொரு சிறுநில குறுநில பெருநில மன்னனும், செல்வந்தர்களும் செல்வாக்கு மிக்கவர்களும் பெரிய மனிதர்களும் முன் முயற்சி எடுத்து நீர்_நிலைகளை அமைத்திருக்கிறார்கள். பலருடைய ப்ெயர் களிலும் எரி குளம் கண்மாய்கள் ஊருணிகள் இருப்பதை தமிழகத்தில் காணலாம். பல ஊர்களின் பெயர்களும் ஏரி, குளம், கண்மாய் ஊருணி, ஏந்தல்கள் பெயர்களில் முடிகின்றன. நடயநேரி, அச்சங்குளம், பாண்டிக் கண்மாய், முத்தனேந்தல் வெற்றிலை பூரணி, போன்ற ஊர்களின் பெயர்களைத் தமிழகத்தில் காணலாம்.

தமிழகத்தின் வரலாற்றின், கலாச்சாரத்தின் பண்பாட்டின் ஒரு பகுதியாக இந்த எண்ணற்ற நீர் நிலைகள் அமைந்திருக் கின்றன.

இந்த நீர் நிலைகள் பல நோக்கம் கொண்டவைகளாக நிர் மாணிக்கப்பட்டிருக்கின்றன.