பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


கணக்கிட்டார். இவர் செவனோக்ஸ் கிளப்பின் ஒட்டக் குறிப்பாளராக (Scorer) இருந்தார். அவர் 1776ம் ஆண்டு. அச்சிட்ட அட்டையில் ஒட்டக்குறிப்புக்களை முதன் முதலில் குறித்த பெருமையைப் பெற்றார்.

பின்னர் 1791 ம் ஆண்டு, சாமுவேல் பிரிட்சர் என்பவர் முக்கிய போட்டி ஆட்டங்களின் மொத்த ஓட்டம் மற்றும் விவரங்களைத் தொடர்ந்து தினசரிப் பத்திரிக்கையில் வெளியிட்டு வந்தார். அது 1805ம் ஆண்டு வரை நீடித்து, தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது.

பிரட் லில்லி ஓய்ட் (Fred Lilly White) என்பவர். ஒரு அற்புத காரியத்தைச் செய்தார், 1848ம் ஆண்டு, அதாவது நடமாடும் அச்சகம் ஒன்றை போட்டி நடக்கும் இடங்களுக்கெல்லாம் எடுத்துச் சென்று, அங்கேயே ஒட்டக் குறிப்புக்கள் பற்றியதை அச்சிட்டுத்தந்தார்.

அத்துடன் நில்லாமல், அமெரிக்காவிலுள்ள கனடாவிற்கு 1859ம் ஆண்டு பயணம் சென்ற குழுவுடன், தனது நடமாடும் அச்சகத்துடன் சென்று, இந்தப் பணியை ஆற்றி பெரும் புகழ் பெற்றார், இத்தகைய ஆர்வம் உள்ளவர்களால்தான், கிரிக்கெட் ஆட்டம் மிகவும் பிரபல்யமடைந்திருக்கிறது என்றால், இது மிகையான கூற்று அல்ல.

ஒட்டக் குறிப்புக்கள் மற்றும் ஆட்டச் செய்திகள், ஆட்டக்காரர்கள் பற்றிய தொகுப்புக்கள் 1862ம் ஆண்டு நான்கு பகுதிகளாக வெளியிடப்பட்டன.

அட்டையிலும், காகிதத்திலும் குறித்தால் மட்டும் போதுமா! பார்வையாளர்களுக்கும் அடிக்கடி ஆட்டம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்பதால், ஆட்டக்குறிப்புப் பலகை (Score Board) ஒன்று அமைக்க வேண்டும் என்கின்ற எண்ணம் உருவானது.

19ம் நூற்றாண்டின் மத்தியில், முதன் முதலாக ஆட்டக்குறிப்புப் பலகைகள் பொருத்தப்பட்டன. 1846ம் ஆண்டு. முதன் முதலாக லார்டு மைதானத்தில், தந்திமுறை குறிப்புப்