பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18



அதுவும் தவிர, எதிர்க்குழுத் தலைவன் நிற்கக் கூடாது என்று குறிப்பிட்டுக் கூறும் இடங்களில் (Position) நின்றுகொண்டும் அவர் பந்தைத் தடுத்தாடவும் முடியாது.

20. மாற்றாட்டக்காரர் ஆடிய இடத்திற்கு மீண்டும் ஆடவருகின்ற நிரந்தர ஆட்டக்காரர்களுக்கு உரிய நிலை என்ன? அவர் மாற்றாட்டக்காரர்போல் தான் நடத்தப்படுவாரா?

அல்ல, அவர் மீண்டும் ஆடும் வாய்ப்பினைப் பெறும்பொழுது, பந்தை அடித்தாட, தடுக்தாட எறிந்தாட ஆகிய எல்லா ஆட்ட உரிமைகளும் உண்டு.

21. காயமுற்ற ஆட்டக்காரருக்காக, விக்கெட்டுகளுக்கு இடையே ஓட்டம் எடுக்க ஓடும் மாற்றாட்டக்காரர், ஓட்டத்தில் ஆட்டமிழந்தால் (run out) என்ன ஆகும்?

மற்றாட்டக்காரர், விதிமுறைகளுக்கேற்ப ஆட்டமிழந்தால், யாருக்காக அவர் ஓடினாரோ, அந்தக் காயமுற்ற ஆட்டக்காரரும் ஆட்டமிழந்து, ஆடும் வாய்ப்பை இழக்கிறார் என்பதே அர்த்தமாகும்.

22.குழுத்தலைவனின் (Team Captain) பொறுப்பு என்ன?

ஒரு குறிப்பிட்ட முறை ஆட்டம் தொடங்குவதற்கு முன் (Inning), தனது குழுவிலுள்ள ஆட்டக்காரர்களின் பெயர்களை எழுதி குறிப்பாளரிடம் கொடுத்துவிட வேண்டும்.

இவ்வாறு, குறித்துத் தரும் ஆட்டக்காரர்களின் பட்டியலை, எக்காரணத்தைக் கொண்டும்.